
மர்ஹூம் பாண்டாபடி மதார்ஷா சுலைமான்
02-02-2025
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
மற்றும்
ஜனாப்.ராஜ்முகமது அப்துல் சலாம்
மூரார்பாது – My Screen’ல் மூன்று பதிவுகளாக
16-10-2020’ல்
பதிவு எண் : 76’ல் ஜனாப்.P.M சுலைமான் அவர்கள் பற்றி பதிவிட்டிருந்தோம்..
அதில்..
1932’ஆம் வருடம் ஜூலை மாதம் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாப் பாண்டாபடி மதார்ஷா சாயபு மற்றும் பாத்திமா பீவி தம்பதிகளுக்கு உடையானச்சி என்ற ஊரில் 10வது பிள்ளையாக பிறந்தவர் ஜனாப் P M சுலைமான் அவர்கள் என்றும்..
நோன்பு நாட்களில் அதிகாலையில் இவரும் இவருடைய நெருங்கிய நண்பர்களான ஜனாப். அந்தி அப்துல் சலாம், ஜனாப் கடுவு ரஜாக் வாத்தியார், ஜனாப் BARC தாவூத், ஜனாப் முஹமதலி ஆதம்ஷா மற்றும் திக்குவாய் ஜப்பார் வாத்தியார் மேலும் இன்னும் சிலருடன் இணைந்து பைத்து பாடியுள்ளார்கள் என்றும்..
இவரது தந்தை ஜனாப் பாண்டபாடி மதார்ஷா சாயபு மூரார்பாதுவில் தனது 15’வது வயதில் வந்து குடியிருப்பதற்கு பத்தாண்டுகள் முன்புதான் நமது ஊர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்கிறார். அதன்படி இன்று பாண்டபாடி ஜனாப். மதார்ஷா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு 128 வயதிருக்கும். 128’ல் 5 ஆண்டுகள் போக மீதமுள்ள 123 ஆண்டுகள் என்பதே நமது ஊர் பள்ளிவாசல் கட்டப்பட்ட காலமாக இருக்கும். அதாவது 1897- 1900’களின் வாக்கில் நமது பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கலாம் என்றும்..
ஜனாப்.P.M சுலைமான் 1952ஆம் ஆண்டு 20 வயதில் மும்பை வந்தவர் எந்த வேலையும் கிடைக்காமல் 3 மாதங்கள் பல இன்னல்களுக்கு சொந்தக்காரனாக வாழ்ந்தார். பிறகு தினம் 1 ரூபாய் சம்பளத்தில் 1953-ல் BPT (Bombay Port Trust) -ல் வேலை கிடைக்கவே அன்று முதல் முதலாளிக்கு நல்ல தொழிலாளியாக இருக்க எண்ணம் கொண்டு தனது வாழ்க்கையை மகிழ்ச்சியோடு துவக்கினார். அதன் பிறகு அல்லாஹ்வின் உதவியால் அடுத்த கட்டமாக லேபர் போர்டில் வேலை கிடைத்தது. 1954ம் ஆண்டு பதவி உயர்வுப் பெற்று க்ரைன் ஒட்டுனராக (Crine driver) நியமிக்கப்பட்டார் என்றும்..
1991’ஆம் ஆண்டு நமது ஊர் மூரார்பாதுவில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு வருவதற்கு முழு முனைப்புடன் செயல்பட்டு வந்தவர்கள் ஜனாப்.P.M சுலைமான் மற்றும் ஜனாப்.T.A மொய்தீன் என்றும்..
அந்த காலத்தை முரார்பாது முஸ்லிம் சுன்னத் ஜமாத் மும்பை கிளையின் பொற்காலம் என்றும் கூறுவது உண்டு, அதற்கான 10 சிறப்பம்சங்கள் இதோ..
- ஜமாத் செயல்பட இடம் வாடகைக்கு வாங்கியது.
- முரார்பாது முஸ்லிம் சுன்னத் ஜமாத் மும்பை பெயர் பலகை போட்டது.
- சந்தாவை உயர்த்தி வருமானம் கூட்டியது.
- சொந்தமாக ஜமாத்திற்க்கு இடம் வாங்கியது.
- சீத்தா கேம்பில் அரபி மதரசா தொடங்கியது.
- ஜமாத் பெயரில் காலண்டர் அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்க தொடங்கியது.
- நோன்பு நாட்களில் பேரிச்சப்பழம் கொடுக்க தொடங்கியது.
- மும்பை ஜமாத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாடியது.
- மூரார்பாது ஊர்மக்கள் அனைவரும் கலந்து கொண்டு மூரார்பாது சுன்னத் ஜமாத் மும்பை கிளையின் காஜி ஜனாப்.ஆலிம் பஷீர் அகமது தலைமையில் மார்க்க வினா-விடை போட்டி, ஹதீஸ், மார்க்ச் செய்தி போன்ற சிறப்பு நிகழ்ச்சி மற்றும் மதிய உணவு அளித்தது.
- மும்பை ஜமாத்தின் 50வது ஆண்டு விழாவின் சிறப்பு மலர் வெளியிட்டு அதன் முதல் சிறப்பு மலரை ஜனாப்.A அப்துல் கலாம் பெற்றுக் கொண்டது என்றும்..
2003ஆம் ஆண்டு ஜனாப்.P.M சுலைமான் மும்பை ஜமாத் தலைவராக இருந்த போது ஊரில் இயங்கி வந்த பெண்கள் அரபி மதரசா போதிய வருமானம் மற்றும் சந்தா கிடைக்காததால் சரியாக பராமரிக்க வேண்டி மும்பை ஜமாத் உதவியை நாடினார்கள். அப்போது மும்பையிலிருந்து 10 முக்கியஸ்தர்கள் ஊருக்குப் போய் பல பிரச்சனைகளை கலந்து பேசி, விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து, ஊர் ஜமாத்தார்கள் மும்பை ஜமாத்தார்களின் ஒற்றுமை மற்றும் உறுதியை பாராட்டி அரபி மதரசாவை முழுமனதுடன் எழுதிக் கொடுத்தார்கள் என்றும்..
2014-ம் ஆண்டு முதல் ஜனாப்.P.M சுலைமான் அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக (Helping hand Foundation) உதவும் கை அறக்கட்டளை, தொடங்கி, அதை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிய்யத்தை தனக்குள் வகுத்து, அதை செயல் வடிவில் வெற்றிக்கரமாக மாதா, மாதம் ரூபாய் 1,000 மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொடுத்து நடத்தி வருகிறார் என்றும்..
- ஏழை விதவைப் பெண்கள் உணவின்றி பசியால் படும் கஷ்டத்தை போக்க வழி உண்டா, என்றால் இல்லை?
- சிறிய ஊர் ஜமாத்தார்களிடம் காஜியார், மோதினார் மற்றும் மதரசாவில் மார்க்கம் சொல்லி கொடுக்கும் முல்லாஜி போன்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க கஷ்டப்படும் ஜமாத்திற்க்கு உதவ வழி உண்டா, என்றால் அதுவும் இல்லை?
- ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு உதவ வழி உண்டா, என்றால் அதுவும் இல்லை? என்பது போன்ற பல கேள்விகளை முன் வைத்தார் என்றும்..
நீ நடக்கத் தொடங்கினால் உனக்கு பாதை தானாக வரும் என்பதைப் போல இதற்கு வேண்டிய பணம் தானாக வரும். உழைக்க நல்லெண்ணம் கொண்ட 3 பேர் முன் வருபவர்கள் ஜனாப்.P.M சுலைமான் அவர்களின் 986 7184 786 இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் எனவும் அவரது தொடர்பு எண் கொடுத்திருப்போம்..
மும்பை தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே சீத்தா கேம்ப், சிவாஜி நகர், நிரோல் போன்ற பகுதிகளில் தன் சமூக மற்றும் ஜமாத் பணிகளினால் மிக பிரபலமாக இருந்தவர் ஜனாப்.P.M. சுலைமான்
கடந்த 27-01-2025 திங்கள் கிழமை இரவு 8 மணியளவில் வஃபாத் ஆகினார்.
அவருக்கான அந்த கனவுகளை இனி தாங்கி சுமக்க போகிறவர் யார்..?
அல்லாஹ், அவரது அனைத்து விதமான நன்மைகளையும் பொருந்திக் கொள்வானாக..
ஆமின்..!
மூரார்பாது – My Screen
Admin & Team
Leave a reply