ஜனாப். P.M.சுலைமான் – 2 # MMS 00077
💐 வெள்ளிக்கிழமை – 16-10-2020 / 7 PM – 10PM – MMS : 00077 ✍️
✍️ஏ.ஹெச்.அப்துல் ரஷித்✍️✍️
முதல் தகவல் – ஜனாப்.ராஜ் முகமது அப்துல் சலாம்
P.M.சுலைமான் அவர்களின் கட்டுரை பாகம் – 2 தொடர்ச்சி..
1990ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மும்பையில் சீத்தா கேம்ப், மான்கூர்டு, வடலா-சிவ்ரி என்ற இடங்களில் பல கிளைகளாக ஜமாத் செயல்பட்டு வந்தது அப்போது ஜமாத் தலைவரும், பொது செயலாளரும் ஓய்வு பெற்று கணக்கு, வழக்குகளை யாரிடமும் ஒப்படைக்காமல், புக்குகளை மட்டும் ஜனாப்.ஆலிம் பஷீர் அகமது அவரிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார்கள். அதன் பிறகு ஜமாத் 2 ஆண்டுகள் எந்த செயல்பாடும் இன்றி முடங்கி இருந்தது.
அதன் பிறகு 1992ஆம் ஆண்டு மீண்டும் ஜமாத்தை தொடங்க ஜனாப்.போஸ்ட்மேன் கமாலுதீன், ஜனாப்.மிலிட்டரி பக்கிரி, ஜனாப்.கடுவு ரஹீம், ஜனாப்.முல்லா பஷீர் அகமது மற்றும் ஜனாப்.T.K முகமதலி மற்றும் சிலரும் இனைந்து ஜமாத்தை சீத்தா கேம்பில் கூட்டினார்கள்.
அப்போதுதான் ஜனாப்.P.M சுலைமான் அவர்களை ஜனாப்.T.K முகமதலி அவர்கள் முன்மொழிய ஒன்றினைந்த மூரார்பாது முஸ்லிம் சுன்னத் ஜமாத் மும்பை கிளையின் தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பிறகு மேலும் இரண்டு முறை பதவியில் இருந்துள்ளார். மும்பையில் நெடுநாளாக தலைவராக இருந்தவர்களில் இவரும் ஒருவராவார்.
அந்த காலத்தை முரார்பாது முஸ்லிம் சுன்னத் ஜமாத் மும்பை கிளையின் பொற்காலம் என்றும் கூறுவது உண்டு, அதற்கான 10 சிறப்பம்சங்கள் இதோ..
- ஜமாத் செயல்பட இடம் வாடகைக்கு வாங்கியது.
- முரார்பாது முஸ்லிம் சுன்னத் ஜமாத் மும்பை பெயர் பலகை போட்டது.
- சந்தாவை உயர்த்தி வருமானம் கூட்டியது.
- சொந்தமாக ஜமாத்திற்க்கு இடம் வாங்கியது.
- சீத்தா கேம்பில் அரபி மதரசா தொடங்கியது.
- ஜமாத் பெயரில் காலண்டர் அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்க தொடங்கியது.
- நோன்பு நாட்களில் பேரிச்சப்பழம் கொடுக்க தொடங்கியது.
- மும்பை ஜமாத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாடியது.
- மூரார்பாது ஊர்மக்கள் அனைவரும் கலந்து கொண்டு மூரார்பாது சுன்னத் ஜமாத் மும்பை கிளையின் காஜி ஜனாப்.ஆலிம் பஷீர் அகமது தலைமையில் மார்க்க வினா-விடை போட்டி, ஹதீஸ், மார்க்ச் செய்தி போன்ற சிறப்பு நிகழ்ச்சி மற்றும் மதிய உணவு அளித்தது.
- மும்பை ஜமாத்தின் 50வது ஆண்டு விழாவின் சிறப்பு மலர் வெளியிட்டு அதன் முதல் சிறப்பு மலரை ஜனாப்.A அப்துல் கலாம் பெற்றுக் கொண்டது.
2003ஆம் ஆண்டு ஜனாப்.P.M சுலைமான் மும்பை ஜமாத் தலைவராக இருந்த போது ஊரில் இயங்கி வந்த பெண்கள் அரபி மதரசா போதிய வருமானம் மற்றும் சந்தா கிடைக்காததால் சரியாக பராமரிக்க வேண்டி மும்பை ஜமாத் உதவியை நாடினார்கள். அப்போது மும்பையிலிருந்து 10 முக்கியஸ்தர்கள் ஊருக்குப் போய் பல பிரச்சனைகளை கலந்து பேசி, விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து, ஊர் ஜமாத்தார்கள் மும்பை ஜமாத்தார்களின் ஒற்றுமை மற்றும் உறுதியை பாராட்டி அரபி மதரசாவை முழுமனதுடன் எழுதிக் கொடுத்தார்கள்.
இதை மும்பை ஜமாத்தார்கள் தங்கள் உழைப்புக்கும், முயற்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த பலன் என்ற அடிப்படையில் பல வருடங்கள் சிறப்பாக நடத்தி 45 பெண் பிள்ளைகள் படிக்கும் அளவுக்கு வெற்றிக்கரமாக நடத்தி வந்தனர். அந்த அரபி மதரசா கட்டிடத்தையும் ரூபாய் 1 லட்சம் செலவு செய்து மும்பை ஜமாத்தார்கள் புதுபித்தார்கள்.
2004ஆம் ஆண்டு மும்பை ஜமாத்தினர் அரபி மதரசா கமிட்டி ஆரம்பித்து அதன் தலைவராக ஜனாப்.T.A மொய்தின், உப தலைவராக ஜனாப்.P.M சுலைமான், செயலாளராக ஜனாப்.T.K ஷபியுல்லா, உப செயலாளராக ஜனாப்.A அப்துல் கலாம் மற்றும் பொருளாளராக ஜனாப்.ஜமாலுதீன் இந்த நிர்வாகிகளின் நேரடி கட்டுப்பாட்டில் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்தனர். சில சமயம் பணம் வசூல் செய்தும் சில சமயம் ஜனாப்.T.A மொய்தீன் மற்றும் ஜனாப்.A அப்துல் கலாம் ஆகிய இருவரும் தன் சொந்தப் கைப் பணத்தை கொடுத்தும் நடத்தி வந்தார்கள்.
மீண்டும், நிர்வாக வசதியின் பொருட்டு தற்போது அரபி மதரசா ஊரிலுள்ள மூரார்பாது முஸ்லிம் சுன்னத் ஜமாத்தார்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது
2006ஆம் ஆண்டு ஜனாப்.P.M சுலைமான் மும்பை ஜமாத் தலைவராக இருந்தபோதுதான் மூரார்பாதுவில் அரபி மதரசாவிற்கு இடம் வாங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சில ஆண்டுகள் அப்படியே போக, அரபி மதரசா கமிட்டியின் தலைவர் ஜனாப்.T.A மொய்தீன் ஊருக்கு போய், அரபி மதரசாவிற்க்கு 10 செண்ட் இடம் வாங்க, 1 செண்ட் இடம் ரூ.10,000/-என்ற விலை அடிப்படையில் பேசி முடிவு எடுக்கப்பட்டு, மும்பை ஜமாத் தலைவர் ஜனாப்.P.M சுலைமான் அவருக்கு போன் செய்து வரவழைத்து, ஊர் ஜமாத்தார்களையும் அழைத்துக் கொண்டு விலை மறுபடியும் பேசிய போது, நில உரிமையாளர் விலை குறைக்க முடியாது என்று சொல்ல, ஜனாப்.P. M சுலைமான் 50 செண்ட் இடம் வாங்கினால் என்ன விலை என ஒரு வழியாக 1 செண்ட் ரூ.8000/- என்று பேசி மொத்தம் ரூ.4 லட்சத்திற்க்கு 50 செண்ட் இடம் வாங்க முடிவு செய்து அதே இடத்தில் ரூ.10,000/- முன் பணத்தை ஜனாப்.A 1 மொய்தீன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஜனாப்.A அப்துல் கலாம் அவரின் உதவியும் இவர்களுக்கு மேலும் உற்சாகம் ஊட்டியது.
இடத்தை ஜமாத் பெயரில் வாங்கினால் அரசாங்கத்தின் பல சலுகைகளைப் பெற முடியாது என்ற காரணத்தால், ஊர் ஜமாத்தார்களும், மும்பை ஜமாத்தின் முக்கியஸ்தர்களும், அரபி மதரசா கமிட்டியின் நிர்வாகிகளும் பேசி ஒரு ட்ரஸ்ட் (Trust) பெயரில் இடம் வாங்கினால் அரசாங்கத்தின் பல சலுகை பெற முடியும், மேலும் மார்க்க கல்வியும் கூடவே உலக கல்வியும் சேர்த்து நடத்தினால் (உதாரணமாக திருச்சியில் செயல்படும் ஜமால் முஹம்மத் காலேஜ்), பெரிய நிர்வாகமாக செயல்படுத்த முடியும் என்கிற தொலை நோக்கு பார்வை உடன் சிந்தித்து, செயல்பட்டு முடிவு எடுக்கப்பட்டது ஆகும். இதுவே ட்ரஸ்ட் (Trust) உருவாக காரணம்.
மூரார்பாது ஊர் ஜமாத்தார்கள் ஒப்புதலோடும், அவர்கள் சாட்சி கையெப்பம் இட்டும் ஜனாப்.P.M சுலைமான் அவர்கள் தலைமையிலான ஜமாத் நிர்வாகிகளின் பெயரில் முதலில் 50 சென்ட் இடம் வாங்கப்பட்டது. அடுத்து இடம் சதுரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேலும் 24 செண்ட் இடம் வாங்க, மொத்தமாக 74 செண்ட் இடம் வாங்கப்பட்டது. இது அல்லாஹ்வின் நாட்டம்.
அந்த காலகட்டத்தில் 4 பேர் மட்டுமே ரூ.3,75,000/-பணம் கொடுத்துள்ளனர், இவர்களை ஜனாப்.P.M சுலைமான் தன் வாழ் நாளில் மறக்க முடியாதவர்கள் என்று கூறுகிறார். இந்த இடம் வாங்க பத்திர பதிவு செய்ததுடன் மொத்தம் ரூ.6 லட்சம் செலவு ஆனது. ஏறக்குறைய 25 நபர்களிடேமே பணம் பெறப்பட்டது என்பது குறிபிடத்தக்கது. ஊர் ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள், மும்பை ஜமாத்தார்கள், மும்பை பொதுமக்கள் யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லாமல் எல்லா வேலையும் சிறப்பாக முடிந்தது.
இதன் பிறகு சுற்றுச்சுவர் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படவே ஜனாப்.P.M சுலைமான், ஜனாப்.T.A மொய்தீன், ஜனாப்.T.K ஷபியுல்லா இவர்கள் பணம் வசூல் செய்து மொத்தம் ரூபாய் 6 லட்சத்தில் சுற்றுச் சுவர் கட்டி முடிக்கப்பட்டது.
ஆக இடம் வாங்க ரூபாய் 6 லட்சம், சுவர் கட்ட ரூபாய் 6 லட்சம் மொத்தம் ரூபாய் 12 லட்சம் செலவு ஆனது. இந்த ரூபாய் 12 லட்சத்தில் 4 பேர் மட்டுமே ரூபாய் 6,25,000/- கொடுத்துள்ளனர். இதற்கு உதவிய அனைவருக்கும் ஜனாப்.P.M சுலைமான் அவர்கள் தாழ்மையோடும், பணிவோடும் அன்பு நன்றியை மீண்டும், மீண்டும் தெரிவிக்கிறார். இந்த இடம் சம்பந்தமான வேலைகளை முடிப்பதற்க்கு இவர்களின் முயற்சி, நேரம், உழைப்பு பற்றி அல்லாஹ்விற்க்கு மட்டுமே தெரியும்.
இன்ஷா அல்லாஹ், மூரார்பாது என்கிற நம் கிராமத்திலும் தரம் வாய்ந்த மார்க்க மற்றும் உலகக் கல்விக்கான கல்வி கூடம் ஒன்றினை அமைக்க அல்லாஹ் நாட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்.. மேலும் சில பதிவுகளை காணலாம்..

ஜனாப்.ராஜ் முகமது அப்துல் சலாம்
மற்றும்
மூரார்பாது – My Screen
Admin & Team
ஜனாப்.மொய்தீன் கமாலுதீன்..
அரபி மதர்சா பற்றி பல பிரச்சனைகள் உள்ளது. இதைப்பற்றி வேறு குழுவில் பல நாட்கள் விவாதம் செய்தாகி விட்டது. ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை மீண்டும் அதைப்பற்றி இக்குழுவில் விவாதிக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து இதற்கு ஒரே தீர்வு நாம் அனைவரும் நேரில் ஒன்று கூடி விவாதித்தால் முடிவு ஏற்படும் வேறு மாற்று வழி இல்லை. வஸ்ஸலாம்.
JANAB MOHAMMED HANEEFA :
மும்பையில் 7.10.1951ல் மூரார்பாது முஸ்லீம் சுன்னத் ஜமாஅத் தோப்பூரார் காஜிமியான் சாஹிபை தலைவராகவும்
S.B.முஹமலி செயலாளராகவும்
V.M.மம்மூஸா பொருலாளராகவும்
T.A.அப்துல் மஜீத் வசூலாளராகவும் பொது மக்களால் ஏகோபித்த ஆதரவுடன்(25உறுப்பினர்களால் மும்பையில் நம் ஊருக்கு கிளை ஜமாஅத் மும்பையில் தொடங்கப் பட்டது
பின் 1961ல் தஞ்சாவூரார் (மூக்க பிள்ளை) T.K. இப்ராஹிம் தலைவராகவும் T.A.அப்துல் மஜீத் அவர்கள் செயலாளராகவும் T.K.முஹமதலி தணிக்கையாளராகவும் A.M.முஹமது ஹபீப் பொருலாளராகவும் பதவி ஏற்றப் பின் அவர்களின் முயற்சியால் ஜமாஅத் சொசைட்டியாக பதிவு செய்யப் பட்டது. அதன் பிறகு 1969ல் K.A. பஷீர் அஹமது தலைவராகவும் S.K.முஹமதலி செயலாளராகவும் T.K.முஹமதலி தணிக்கையாளராகவும்
இருந்தார்கள் இந்த காலக் கட்டத்தில் ஏற்பட்ட அதிகார போட்டியால் 61 உறுப்பிரை கொண்ட ஜமாஅத் 40,..24..என்ற அளவில் சுருங்கி போனது
1976-77ல் A.M.ஹபீப் தலைவராக,T.A.அப்துல் மஜீத் செயலாளராவும்T.K.முஹமதலி தணிக்கையாளராகவும் சொற்ப உறுப்பினர்களை (24) கொண்டு ஜமாஅத்தை நடத்தி வந்தார்கள் அது 1992ம் ஆண்டு 46 என்ற எண்ணிக்கையை தொட்டது.1958 ம் ஆண்டு முதல் மும்பையில் ஜமாஅத்துக்கு இடம் வாங்க வேண்டும் தீர்மானம் போடுவார்கள் ஆனால் ஜமாஅத் செலவினங்களுக்கு போக மீதி தொகையை ஊருக்கே செலவு செய்தார்கள் 1992ம் ஆண்டில் A.கமால்தீன்.B.பக்கீர் முஹமது F.அப்துல் ரஹீம் ஆகிய மூவரும் பம்பாயில் ஜமாஅத்துக்குஇடம் வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தை முன் வைத்து ஜமாஅத்துக்கு புத்துயிர் ஊட்டினார்கள்
இந்த நோக்கத்துக்காக புரைமைக்கப் பட்ட ஜமாஅத்துக்கு P.M.சுலைமான் அவர்கள் தலைவரானார் A.கமாலுதீன் செயலாளரானார்T.A.மொய்தீன் பொருலாளரானார் T.K.முஹமதலி ஆடிட்டரானார் இந்த காலத்தில் கமால்தீன், பக்கீர் முஹமது,அப்துற் ரஹீம் மூவருடன் S.ஜமால்தீன்,K.முஹமது ஹனீபாவும் சேர்ந்த இந்த ஐவர் குழுதெரு தெருவாக அலைந்து 46 ஆக இருந்த உறுப்பினர் எண்ணிக்கையை 200 ஆக சேர்த்தார்கள் அன்று ஜமாஅத்துக்கு தலைவராக இருந்தவர் மதிப்புக்கும்மரியாதைக்குரிய சுலைமான் அனைவரையும் அரவனைத்து சென்ற நற்பண்புக்குரியவர் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் ஊருக்கும் இரு பள்ளிகூடங்கள் அமையவும் பள்ளிவாசலை பராமரித்து பழுது பார்த்து அலங்கரித்து கொடுத்ததும் T.A.அப்துல் மஜீத் அவர்களே அவருக்கு துணையாக இருந்தவர்கள் T.K.முஹமதலி ஊரில் Bபாவாசா,B.அப்துல் கனி மற்றும் ஊரில் இருந்த முக்கியஸ்தர்கள் உண்மைஇப்படி இருக்க சுலைமான் அவர்களை முன்னிறுவதன் நோக்கம் என்ன? இந்த பதிவு காதர்மியான் அப்துல் மஜீத் அவர்களிடமிருந்து தொடங்க வேண்டும் சுலைமான் அவர்களை முன்னிறுத்துவதின் பின்னனி என்ன?
Pingback: மர்ஹூம் பாண்டாபடி மதார்ஷா சுலைமான் – 💐 Murarbadu – My Screen ✍️