ஜனாப்.P.M.சுலைமான் – 3 # MMS 00078
💐 வெள்ளிக்கிழமை – 16-10-2020 / 7 PM – 10PM – MMS : 00078 ✍️
✍️ அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ் ✍️✍️
முதல் தகவல் – ஜனாப்.ராஜ் முகமது அப்துல் சலாம்
P.M.சுலைமான் அவர்களின் கட்டுரை பாகம் – 3 தொடர்ச்சி..
2014-ம் ஆண்டு முதல் ஜனாப்.P.M சுலைமான் அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக (Helping hand Foundation) உதவும் கை அறக்கட்டளை, தொடங்கி, அதை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிய்யத்தை தனக்குள் வகுத்து, அதை செயல் வடிவில் வெற்றிக்கரமாக மாதா, மாதம் ரூபாய் 1,000 மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொடுத்து நடத்தி வருகிறார்.
முதலில் சொந்தப் பணம் போட்டு 5 விதவைப் பெண்களுக்கு உதவி செய்ய தொடங்கிய இவரின் Helping Hand அறக்கட்டளை, தன் சொந்த முயற்சியால் இன்று மாதம் 65 பேருக்கு கொடுத்து உதவும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
இவர் தன் சொந்த செலவில் 3 ஏழைப் பெண்களுக்கு உலகக் கல்வியையும், 4 ஏழைப் பெண்களுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பதுப்போல் இவரது உடல் ஆரோக்கியத்திற்க்கும், குடும்ப முன்னேற்றத்திற்கும், பொது வாழ்க்கைக்கும் துணையாக வலதுகரமாக இருந்து, பெருமை காத்த மனைவியை, துனைச் சேர்த்த இறைவனுக்கு நன்றியையும், நாம் மனிதர்களுக்கு உதவுவதுப் போல, நமக்கு உதவி செய்ய இறைவன் நல்ல மனிதர்களை அனுப்புகிறான் என்பதும் ஜனாப்.P.M சுலைமான் அவர்களின் அனுபவம் ஆகும்.
ஜனாப்.P.M சுலைமான் அவருக்கு எப்போதுமே நம் ஊர் மீதும், நம் ஊர் மக்கள் மீதும் ஒரு தனி ஈடுபாடு இருந்ததினாலே மூரார்பாது 100 ஆண்டு வரலாற்றில் இவர் ஒர் சின்ன புள்ளியாக இருந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. இவர் பொது வாழ்க்கையில் முன்னின்று செயல்பட்டது ஒரு புள்ளி என்றாலும் எந்த ஒரு வெற்றியும் தனி மனிதனால் மட்டும் உண்டாவது இல்லை.
தற்போது 88 வயதில் ( 2020 ) இருக்கும் ஜனாப்.P.M சுலைமான், தனது 62 ஆண்டு பொது வாழ்க்கையில் சீனியரான இவரின் கடைசி ஆசை என்னவென்றால் மூரார்பாதுவில் உயர்தர காலேஜ் கட்டி முடிப்பது, பிறகு நவி மும்பை நிரோலில் மூரார்பாது மும்பை ஜமாத்திற்க்கு இடம் வாங்குவது. அடுத்து நமது சமுதாய மக்கள் தமிழ்நாடு, இந்தியாவின் வெவ்வேறு பகுதி மற்றும் அயல் நாடுகளிலும் (மூரார்பாது, மோவூர், கடலூர், கள்ளக்குறிச்சி, L.N பட்டி, மாடூர், சிறுவத்தூர், தாவடிப்பட்டு, முகமதியார்பேட்டை, சென்னை, பெங்களூர், மும்பை மேலும் சில ஊர்கள்) பெருவாரியாக வாழ்கிறார்கள். ஆனால் ஊருக்கு ஒரு ஜமாத் என்ற அடிப்படையில் நிறைய ஜமாத்துகள் இருந்தும் எந்த தொடர்பும் இல்லாமல், ஒற்றுமையும் இல்லாமல் இருக்கின்றன. சிந்திக்க வேண்டியது என்ன வென்றால்
- ஏழை விதவைப் பெண்கள் உணவின்றி பசியால் படும் கஷ்டத்தை போக்க வழி உண்டா, என்றால் இல்லை?
- சிறிய ஊர் ஜமாத்தார்களிடம் காஜியார், மோதினார் மற்றும் மதரசாவில் மார்க்கம் சொல்லி கொடுக்கும் முல்லாஜி போன்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க கஷ்டப்படும் ஜமாத்திற்க்கு உதவ வழி உண்டா, என்றால் அதுவும் இல்லை?
- ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு உதவ வழி உண்டா, என்றால் அதுவும் இல்லை?
ஆக இந்த 3ம் கெடும் போது சமூகமே கெடுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் நமது இன மக்கள் வாழ்க்கையில் கல்வி அறிவின்றி சமுதாயத்தில் முன்னேற்றம் இல்லாமல் ஜீரோவில் இருந்தனர். ஆனால் இன்று நமது இன மக்கள் சமுதாயத்தில் உயர்ந்து கல்வியில் பட்டம் பெற்று டாக்டர், இன்ஜினியர், தொழிலதிபர், விவசாயிகள், வியாபாரிகள், உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் பல உயர்ந்த பதவிகளில் வேலையிலிருந்து கை நிறைய சம்பாரித்தும் அல்ஹம்துல்லாஹ்! நன்றாக இருந்தும், மேலே குறிபிட்ட 3 பேரும், பெரும் கஷ்டத்தில் இருந்தால் நமக்கு எல்லாம் தலைகுனிவு அல்லவா?
இதற்க்கு தீர்வு என்னவென்றால் பல்வேறு ஊர்களில் உள்ள ஜமாத்தார்களை ஒன்றினைப்பதுதான்.
நீ நடக்கத் தொடங்கினால் உனக்கு பாதை தானாக வரும் என்பதைப் போல இதற்க்கு வேண்டிய பணம் தானாக வரும். உழைக்க நல்லெண்ணம் கொண்ட 3 பேர் முன் வருபவர்கள் ஜனாப்.P.M சுலைமான் அவர்களின் 986 7184 786 இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹான தாலா ஜனாப்.P.M சுலைமான் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயூளையும், மிகுந்த சந்தோசத்தையும் கொடுத்து, இவரின் கடைசி ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பானாக!
ஆமின்..

ஜனாப்.ராஜ் முகமது அப்துல் சலாம்
மற்றும்
மூரார்பாது – My Screen
Admin & Team
ஜனாப்.மொய்தீன் கமாலுதீன்..
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இது போன்ற விசயங்களை அவர்கள் சொல்ல தேவையில்லை என்றாலும் தெரிந்தவர்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டும் ஏன் என்றால் நாமும் இது போல் எதாவது செய்யலாம் என எண்ணம் வரும். இதுவும் ஒரு பொது நல தொண்டுதான்.
Pingback: மர்ஹூம் பாண்டாபடி மதார்ஷா சுலைமான் – 💐 Murarbadu – My Screen ✍️