
தூய ஓட்டு vs தீய ஓட்டு
21-12-2025
மூரார்பாது – My Screen
Admin & Team

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
2026 ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் என்பதால் பொதுவான அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தமும் கூடுதல் பரபரப்பை – பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறப்பு தீவிர படிவம் என்ன தகவல்களை கோருகிறது என மெத்த படித்தவர்கள்கூட வீடு வீடாக வரும் 4 ஆம் வகுப்பு படித்த அலுவலரிடம் கேள்விகளாக கேட்டு விடை புரியாமல் காத்துக்கிடக்கின்றனர் என்றும்..
எஸ்.ஐ.ஆர் என்றால் என்ன?
வாக்காளர் பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்) – Special Summary Revision (SSR) தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
எஸ்.எஸ்.ஆர் நடைமுறையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் வாக்காளரின் சுய விவரங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன. இது அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.
எஸ்.ஐ.ஆர் என்பது தேவையைப் பொருத்து தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-2005 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்..
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கையொப்பம் இட்டு சமர்பித்து விடலாம். இரண்டாம் கணக்கீட்டு படிவத்தில் அலுவலர் கையொப்பம் பெற்று நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு உங்களுக்கான படிவத்தில் தரப்பட்டுள்ள Booth Level Officer‘ஐ அனுகலாம்.
அல்லது அழைக்கவும் +91 98840 78865 எனவும் கட்டுரை மூரார்பாது – My Screen‘ல் மிக தெளிவாக பதிவிட்டு இருப்போம்.
மேலும், அடுத்த கட்டுரையில் படிவம் கொண்டு போய் சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் சேர்ப்பதில் துவங்கி, வாக்களர்களின் இல்லம் சென்று மிக கவனமாகவும், மிக சிறப்பாகவும் பணிகளை முன்னெடுத்து மூரார்பாது மஹல்லாவாசிகளின் அத்துனை ஐய்யங்களையும் போக்கி 350க்கும் மேற்பட்ட படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உடன் நின்ற மூரார்பாது முஸ்லீம் கல்வி வழிகாட்டி குழுமம் உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் திட்டமிடல் மிக மிக பாராட்டத்தக்கது.
மூரார்பாது முஸ்லீம் கல்வி வழிகாட்டி குழுமம் முன்னெடுத்த மிக சிறப்பான செயற்பாடுகளுக்கு
வாழ்த்துக்கள் எனவும் முடித்திருப்போம்.
இவ்வாறாக நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணிகளின் முடிவு என்ன..?
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இன்னும் சீராக இப்பணி நடந்திருந்தால், நீக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்து வந்த பாதையும் தற்காலிக முடிவும்..?
வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி கடந்த 14ம் தேதி முடிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த அக்., 27ம் தேதியின்படி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 6 கோடியே 41 லட்சத்து 14,587. தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76,755 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 கோடியே 66 லட்சத்து 63,233 பெண்கள்; 2 கோடியே 77 லட்சத்து 6,332 ஆண்கள்; 7,191 மூன்றாம் பாலினத்தவர்; 4 லட்சத்து 19,355 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் கணக்கெடுப்பு பணியின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் குறைந்தபட்சம் மூன்று முறை, வீடுதோறும் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.
இறந்தவர்கள் 26 லட்சத்து 94,672; இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் 66 லட்சத்து 44,881; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 39,278 பேர் என, மொத்தம் 97 லட்சத்து 37,831 பேர், பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணக்கீடுக்கு முன்பு 11,60,607 வாக்காளர்கள் எனவும், தற்போதைய வரைவு வாக்காளர்கள் பட்டியலில் உள்ளவர்கள் 10,76,278 எனவும், நீக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,329 எனவும் விபரம் வெளியாகியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R.) 2026 – வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் தேடுவதற்கு:
https://electoralsearch.eci.gov.in/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R.) 2026 – வாக்காளர் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் அதன் காரணம் அறிவதற்கு:
https://erolls.tn.gov.in/asd/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R.) 2026 – வாக்காளர் பெயர் பட்டியல் பாகம் வாரியாக பார்ப்பதற்கு:
https://erolls.tn.gov.in/rollpdf/acwise_pdf.aspx
SIR2026 | #TamilNaduElections #வாக்காளர்_பட்டியல்
https://www.elections.tn.gov.in/SIR_2026.aspx என்கிற வலைதள முகவரி மூலம் தேடலாம்.
- பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7, முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் வழங்கலாம்.
- மேலும், www.elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம். அவற்றை ஆய்வு செய்ய, 234 தேர்தல் அலுவலர்கள் மற்றும் 1,776 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர்
- பெயர் சேர்க்கப்படாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்கள் பற்றிய ஓட்டுச்சாவடி வாரியான பட்டியல்கள், பொது மக்கள் பார்வைக்காக பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். தங்கள் பெயர் இடம்பெறாததற்கான காரணத்தை அறியலாம்
- இந்த பட்டியல்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல், அடுத்த ஆண்டு பிப்., 17ம் தேதி வெளியாகிறது.
இளம் வாக்காளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்
வரும் 2026 ஜன., 1ம் தேதி அல்லது அதற்கு முன், 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள், படிவம் 6ஐ பூர்த்தி செய்து, உறுதிமொழி படிவத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தகுதியான இளம் வாக்காளர்களையும் பதிவு செய்வதற்காக, தமிழகம் முழுதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சரி.. மூரார்பாது கதை என்ன..?
மூரார்பாதுவில் மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி குழுமத்தின் மிக சிறப்பான செயற்பாடுகள் காரணமாக நம் சமுதாய தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் விடுபட வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
ஜனாப்.நூர் முஹம்மது அப்துல் சத்தார், ஜனாப்.அசன் முகமது, ஜனாப்.தாஜூதீன், ஜனாப். மொய்தீன் கமாலுதீன் மற்றும் அண்ணார் அன்சர் அலி இப்ராஹிம் போன்றோர்கள் நேரம் ஒதுக்கி மிக சிறப்பாக களமாடினார்கள்.
வாழ்த்துக்கள்
மூரார்பாதுவில் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து 167 வாக்காளர்களின் பெயர்களாக நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இருப்பிடத்தில் வசிக்காதவர்கள், இறந்தவர்கள், முன்னரே பதிவு செய்யப்பட்டவர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள் மற்றும் படிவம் சமர்பிக்காதவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தகுதி வாய்ந்த வாக்காளர்கள் படிவம் சமர்பிக்க தவறி இருந்தால் புதிய படிவம் சமர்பிக்க 20/21- 12-2025 ஆகிய இரண்டு நாட்களில் சமர்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்கள்
இடம் : சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகள்
நேரம் : மாலை 5 மணிவரை
வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை..
வாக்குரிமை நமது உரிமை
வாழ்த்துக்கள்..
மூரார்பாது – My Screen
Admin & Team







Leave a reply