
மூரார்பாது (மன்னர்) வகையறாக்கள் # MMS 000200
MMS – 000200
19-10-2025
மூரார்பாது ( மன்னர் ) வகையறாக்கள்
ஜனாப்.ரியாஸ் அஹமத் லாலா மியான் காஜி அவர்களுடன் மூரார்பாது – My Screen Admin & Team
கட்டுரையாளர் ஜனாப் ரியாஸ் அஹமது லாலா மியான் காஜி மூரார்பாது – My Screen தள வாசிகளுக்கு நன்கு அறிமுகமானவர்.
இவரின் சங்கராபுரம் To கள்ளக்குறிச்சி ( வழி ) பரமனத்தம்
https://www.murarbadumyscreen.in/?p=257 – MMS – 098
ஷைத்தான்களி எதிரியாவோம் –MMS – 105
https://www.murarbadumyscreen.in/?p=159
தூண்டில் மீன்கள் – MMS – 159
ஆகிய கட்டுரைகளும் அவரின் முதல் கட்டுரையான மூரார்பாது பெயர் காரணம் என்கிற ஆய்வும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
அதிகம் மூரார்பாது – My Screen’ல் வியந்து பார்க்கப்பட்ட கட்டுரைகளில் ஜனாப்.ரியாஸ் அஹமது லாலா மியான் காஜி அவர்களின் கட்டுரைக்கு தனி இடம் உண்டு..
மூரார்பாதுவில் வசித்த – வசிக்கும் வகையறாக்களைப்பற்றிய மூரார்பாது மன்னர்கள் என்கிற இக்கட்டுரையும் அவரின் தனி முத்திரையே..
வாருங்கள் ஜனாப்.ரியாஸ் அஹமது லாலா மியான் காஜி அவர்களின் கட்டுரைக்குள் செல்வோம்
மூரார்பாது – My Screen
Admin & Team
✍️ஜனாப்.ரியாஸ் அஹமது லாலா மியான் காஜி ✍️✍️
மூரார்பாது (மன்னர்) வகையறாக்கள்
வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..
ஊர் ( பொது ) பாதை
முன்பொரு காலத்தில் தஞ்சாவூரை ராஜ ராஜ சோழன் என்ற மன்னன் ஆண்டு கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் அறிந்தோ அறியாமலோ அந்த செய்தியை பாறைகளிலும் கோவில் சுவர்களிலும் சிற்பிகள் கல்வெட்டுகளாக வடித்தனர். அப்போது அதனை பார்த்த சிலர் “ஏன் இந்த வேண்டாத வேலை இவங்களுக்கு, வேற வேலை கிடைக்கலையா..? என்று நகைத்து விட்டு சென்றார்களாம். ஆனால் அதுதான் இப்போது நமக்கு தஞ்சாவூரை ஆண்டது ராஜராஜ சோழன் என்கிற அறிமுகம் செய்து வைக்கும் முகப்புரையாகவும், ஆதாரமாகவும் அமைந்தது.
ஆனால் அதற்கு முன்பாகவும் பின்பாகவும் பல மன்னர்கள் ஆட்சி புரிந்து சென்று விட்டனர். ஆனால் அவர்களை பற்றி எல்லாம் இன்று நமக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர்களும் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். அவர்களது வரலாறும் அவர்களோடு அழிந்து போனது.
அதேபோன்று நமக்கு நமது பாட்டனாரை தெரியும். ஏன் சில பேருக்கு பூட்டனார் பெயர் கூட தெரியும். இன்னும் சிலருக்கு அவருடைய மூதாதையர் கூட தெரியும். ஆனால் அதற்கு முன்பான வரலாறு நம்மில் பலருக்கு தெரியாது. காரணம் இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அந்த செய்தியை நமக்கு முந்தைய சமுதாயத்திற்கு அறிவுறுத்தவும் இல்லை, அவர்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை.
எனவேதான் அவர்களைப் பற்றிய செய்திகளை நாம் அறியாதவர்களாக இருக்கின்றோம். எனவே நாம் தற்சமயம் நமக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி நமக்கு பின்னால் வருகின்ற அல்லது நம்மோடு தற்சமயம் இதனை பற்றிய புரிதல்கள் இன்றய சமுதாயத்திற்கும் இளைய முதாயத்திற்கும் இதனை எடுத்து வைப்போம், சொல்லி வைப்போம். யார் கண்டது பின்னொரு காலத்தில் இதுவே கூட நாம் வாழ்ந்ததற்கான சான்றுகளாக நமக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் எடுத்துக் கொள்ளலாம்.

ஊர் ( மூரார்பாது ) பாதை
“சார் அவன் என்னை பட்ட பேர் சொல்லி கூப்பிடுரான் சார்” நாம் பள்ளியில் படிக்கும் பொழுது ஆசிரியரிடம் அதிகபட்சம் புகார் சொல்லியது இதற்காக தான் இருக்கும்.
ஆனால் ஊருக்குள் பார்த்தால் நம் தாத்தா, கொள்ளுத் தாத்தா இவர்களுக்கெல்லாம் பட்ட பெயர் சொல்லித்தான் கூப்பிட்டு இருக்கிறார்கள். பின்னாளில் அதுவே அவர்களது தனித்த அடையாளமாக அவர்களின் சந்ததி வரை அதே பெயர் சொல்லி அழைக்க கூடிய நிலையில் இன்றும் நாம் இருக்கின்றோம். அப்படியாக நமது ஊரில் செல்லமாக, கௌரவமாக, குறிப்பாக அழைக்கக்கூடிய பல நல்ல அல்லது சொல்லக்கூடிய கூப்பிடக்கூடிய பட்டப் பெயர்களை உங்களுக்கு நினைவு படுத்தவும் நமது பாரம்பரியத்தை நினைவு படுத்தயும் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
முதலில் முஸ்தபா என்ற பெயரில்
காஜி முஸ்தபா
டிரைவர் முஸ்தபா
தாவடிபட்டு முஸ்தபா
பொட்டுகண்ணு முஸ்தபா
புதுப்பேட்டை முஸ்தபா
இப்படியாக அரை டஜன் முஸ்தபாக்களை துணைப் பெயர்களுடன் கூப்பிட நாம் கேட்டிருக்கின்றோம்.
மேலும்
A1 மொஹைதீன்
கர்கா ஹனிபா
வீரங்கி ஹனிபா
கார்சா
கட்ட கார்சா
லம்பு
பந்தேஷா வாத்தியார் என்கிற பெயர்களும் மிக பிரசித்தம் நம் மூரார்பாதுவில்..
இங்கு யாரையும் இழிவு படுத்தும் நோக்கத்தில் அல்ல, மாறாக இன்று இருக்கும் இளைய தலைமுறையினரிடம் நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் துணை பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் கொண்டாபட்டார்கள், என்று தெரிவிக்கவே இதனை இங்கே குறிப்பிடுகின்றோம்.
புகழ்பெற்ற பட்டப் பெயருடன் ஒரு ஆளுமையாக இருந்த நம் முன்னோர்கள் முதலாவதாக கடுவு நாட்டாமை அவர்கள் உள்ளார்கள்.
தன்னுடைய பேச்சில் தெளிவுடனும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் ஏற்றுக்கொண்டு அதனை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த எல்லோருடனும் நேர்மைக்காக கடுகடுவென்று இருந்த நாட்டாமைதான் பக்கிரி முஹம்மது என்கின்ற கடுவு நாட்டாமை. இவர் மிகப்பெரிய அளவில் கடுகு வியாபாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோன்று புனைப் பெயருடன் தன்னுடைய பேச்சில் வீரத்துடனும், விவேகத்துடனும் நடந்துகொண்ட ஊர் பஞ்சாயத்தில் மாற்றிப் பேசும் ஒருவரையும் விடாமல் கிடுக்கிப்பிடி கேள்விகளால் அசரவைத்து, இவரிடத்தில் பஞ்சாயத்து என்று சென்றால் தவறு என்று ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும், அவர் விடமாட்டார் பிடித்துக் கொள்வார் என்று அதற்காகவே அவரை கொண்டி என்று மக்கள் செல்லமாக அழைத்து இன்று அவரின் பேரன்கள் வரை அதே பெயரை சொல்லி செல்லமாக அழைக்கப்படும் அதற்கு காரணமாக இருந்தவர். தன் தந்தை வீர சுல்தான் சாயுபு போலவே நாட்டாமையாக வாழ்ந்து மறைந்த கொண்டி பகுருதீன் அவர்கள்,
இவர்களது ஞாபகமாகவே சுல்தான் வீதி என்று அவர்களது பகுதிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று இன்னும் பல புகழ்பெற்ற பெயர்களுடன் கூடிய நபர்கள் நபர்களுடன் கூடிய பெயர்கள் நமது ஊரில் உண்டு அதில்
மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரியவர் திருவாளர் தடபுடல் மொய்தீன், எந்த ஒரு செயலையும் எடுத்துக்கொண்டு அதை செய்யலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே அல்லாமல் அதனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து முடிக்கக் கூடிய வல்லமை பெற்றதால் அவரை தடல் புடல் மொய்தீன் என்று மக்கள் அழைத்தார்கள்.
கோசாலி அப்துல் ரஹ்மான் சாயபு அவர்கள் தன் கருத்தில் மிக ஆழமாக எவருக்கும் வளைந்து கொடுக்காத குணம் கொண்டவராக இருப்பாராம். அதன் காரணமாக மாறா குணம் கொண்டவர்களை அழைக்கும் கோசாலி என்கிற சொல்லால் அழைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.
மேலும் சிலரது மூதாதையர்கள் எந்த பகுதியில் இருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரை கொண்டே அவரின் அவர்களின் சந்ததியினரை மக்கள் அழைத்தார்கள் உதாரணமாக நமது பள்ளி வாசலில் நிர்வாகியாகவும் நமது ஊர் பள்ளிவாசல் மற்றும் மதரசா வளர்ச்சி பெற முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்த அப்துல் மஜீத் சாஹிப் அவர்கள் அவர்களது முன்னோர்கள் தொப்பூர் என்கிற ஆந்திர பிரதேசத்தில் அல்லது தமிழகத்தின் ஒரு பகுதியில் இருந்து வந்ததன் காரணமாக அவர்களது இன்றைய சந்ததியினர் தொப்பூர் / தோப்புராங்க என்ற அடைமொழியுடன் அவர்களது பெயரை கூப்பிடுவது இன்றுவரை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள். அதுவே அவர்களது அடையாளமாகவும் இன்றுவரை திகழ்கிறது.
கௌரவ பெயர்
ஊரில் பல தலைமுறைகளாக மக்களுக்கு மார்க்க கல்வியை கற்று தந்த மக்களுக்காக தொழ வைத்த லாலா மியான் சாஹிப் அவர்களை மக்கள் காஜி என்றே அழைத்தார்கள் அவரது மகன் காதர் பாஷா வையும் காஜி என்றே அழைத்தார்கள். அவரது பேரன்கள் முஸ்தபா அவர்களையும், அப்துல்லாஹ் அவர்களையும், மக்கள் காஜி என்றே அழைத்தார்கள் அவரது வீடு இன்று வரை காஜி வீடு என்றே அழைக்கப்படுகிறது
இன்னும் சொல்லப்போனால் ஹாஜி முஸ்தபா அவர்களின் பெயரே மறந்து போகும் அளவுக்கு மக்கள் அவரின் தாத்தா லாலா மியான் காஜி அவர்களின் பெயரைக் கொண்டே அவர்களை அழைத்தார்கள் என்பது வரலாறு.
இன்னும் நிறைய செல்ல பெயர்கள் ஊரின் பெயரில் இருக்கின்றன அதனை பற்றி கீழே காண்போம்.
மங்கலதாங்க,
வீரன்கியாங்க,
சூரபுத்துரார்
நைனாபாளையதார்,
சிங்கபூரார் எனவும்..
இன்னும் நிறைய செல்ல பெயர்கள் ஊரில் இருக்கின்றன அதனை பற்றி கீழே காண்போம்.
மிளகாபொடி,
போச்சரிப்பங்க,
அல்டாப், ஒருவருக்கு சூட்டப்படும் பட்டப்பெயர் என்பது அவரை எல்லாவிதத்திலும் உயர்த்த வேண்டுமே தவிர எந்த விதத்திலும் தாழ்த்தக் கூடாது என்பதே எங்கள் உயரிய நோக்கம்
ஊரில் ஒரு சில பட்டப் பெயர்கள் மிக சுவாரசியமானவை அதனை இந்த இளைய தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அன்றி வேறு எதற்காகவும் இந்த கட்டுரை எழுதப்படவில்லை
மூராபாதில் பொதுவாக அறியப்படும் வகையறாக்கள் எனில்..
• தோப்பூராங்க..
• கடுவு நாட்டாமை..
• பாபுன் ராவுத்தர்..
• வீர சுல்தான் (வீதி)(கொண்டி) சாயபு..
• அந்தி அல்லாஹ் பிச்சை சாயபு..
• வடக்கந்தூரார்..
• மொட்டை சுல்தான் சாயபு..
• மூலவீட்டுக்காரர் அப்துல் சாயபு..
• ஜடுக்கா சாயபு..
• வடக்கந்தூரார்..
• கருக்கா வாத்தியார்..
* வீரங்கியார் ஹனிபா சாயபு..
• வங்காரத்தாங்க..
• வட்டி மூசா..
• சவாஸ் வீடு..
• வண்டிக்காரங்க..
- SMS அஜீஸ்
- அம்மம்பாளையதாங்க கரீம் வாத்தியார்
- சக்கரை..
- காட்டுக்காரர் சர்க்கரை..
• சீனா கானா இப்ராஹிம் சாயபு..
• பொட்டுக்கண்ணு..
• மங்களத்தார்..
• லால்பேட்டையாங்க..
• டிக்காங்க..
• கெண்டியர்..
• பீர்காரங்க..
• சொத்தாங்க வீடு..
• பம்பு வீடு..
• ஹாஜிராங்க..
• துருவத்தாங்க..
• ஆதியூர் சின்ன ஹாஜிராங்க.. - பூனுராங்க
- தப்படிக்காரங்க
- படுபடு
- சூரப்புத்துரார்
- அந்தி சலாம்
- பொச்சரிப்பாங்க
- பெட்ரோமாக்ஸ் தாத்தா
- கெண்டியார்
- மிஷின் கமால்
- தஞ்சாவூராங்க
- புன்னாக்கு ராவுத்தர்
- ஆதியூரார்
- பஸ் ராவுத்தர்
- சோழம்பட்டு மோதி
- தறி வாத்தியார்
- புளி மூட்டை
- அழகாபுத்துரார்
- ஆஜரார்
- ஜடுக்கா சாயபு
- தொந்தாலி வீடு
- நெடுமானூரார் வீடு
- கப்பக்கால் சத்தார்
- மாவு மில்காரங்க
- பண்ருட்டியார்
என பலப்பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே அவர்களுக்கு உன்னத தோழனாக இருந்த நபித்தோழர் ஹுறைரா (ரலி) அவர்கள் ஒரு பூனை வைத்திருந்து அதனை எந்நேரமும் தன்னுடனேயே வைத்து இருந்த காரணத்தினால் அவருக்கு தன் பெயரின் முன்னால் அபூஹுரைரா என்று ஒரு பட்டப்பெயர் அதாவது பூனை தந்தை என புனைபெயர் வைத்தார்கள் அதற்கு நபி நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. காரணம் அது அவரை பழிக்கவில்லை
அதே போன்று இனிவரும் காலம் உங்களில் எவரும் புனை பெயர் என்பது ஒருவருக்கு எந்தவிதத்திலும் அவரை பழிக்காத விதத்தில் அமைந்தால் நல்லது இல்லையென்றால் அப்படி சூட்டுவதை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.
ஆமாம், நீங்கள் எந்த வகையறா..?
வாருங்கள்.. நம் பாட்டன் பூட்டன் யார் என இங்கே பதிவாக்குவோம்.
கோசாலி அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ் அவர்களுடன்
ஜனாப்.ரியாஸ் அஹமத் லாலா மியான் காஜி
மற்றும்
மூரார்பாது – My Screen
Admin & Team







அஸ்ஸலாமு அலைக்கும்
எங்க குடும்ப அம்மம்பாளையதாங்க கரீம் வாத்தியார் அவருடைய மூத்த ஐந்து சகோதரர்கள் உட்பட எல்லோரும் இந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று இந்த கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை