
“SIR.. எங்க தாத்தி பேரைக் காணோம் SIR”
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️


07-12-2025
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
கடந்த பதிவில் SIR என்கிற வாக்காளர் சிறப்பு தீவிர பட்டியல் குறித்தும்..
அதற்கான படிவம் சமர்பிக்க என்ன செய்ய வேண்டும் எனவும் விரிவாக பார்த்திருப்போம்..
அந்த பதிவின்போது இந்த SIR தேவை இல்லாத ஒன்று எனவும், இது சிறுபான்மையின மக்களுக்கு எதிரான ஆளும் தேசிய கட்சியின் சூழ்ச்சி எனவும்..
பீகாரில் நீக்கப்பட்டவர்களில் அதிக பெறும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்களே.. எனவும்..
முந்தைய சிறப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் பெயர் மற்றும் விபரம் கேட்டால் எங்கு போய் தேடுவது..? எனவும்..
முந்தைய சிறப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் மற்றும் விபரம் கேட்டால் எங்கு போய் தேடுவது..? எனவும் மிக விபரமானவர்களே தவித்துப்போனார்கள்.

“பாய்.. நான் நூர் முஹம்மது பேசுறேன். அம்மாவோட SIR படிவம் எங்கிட்டதான் இருக்கு.. நான் காசிம்கிட்டே கொடுத்துள்ளேன். அம்மாவோட பார்ம் நிரப்பி தரனும்..” எனவும்..
“பாய்.. பார்ம் பார்த்தேன்.. அவங்க 2002’லயே வாக்காளர் என்பதால் அவங்க விபரம் மட்டும் போதும். மேலும், விபரம் இணைக்க வேண்டாம் பாய்..” எனவும்..
“நான் நாளை மூரார்பாதுவில் இருப்பேன். விபரம் தேவை என்பவர்கள் என்னை அனுகலாம்” எனவும் பாபுஜி தொடந்து களத்தில் இயங்கி கொண்டே இருந்தார்.
சுன்னத் பள்ளிவாசலுக்கு வரவும்..
தவ்ஹீத் பள்ளிக்கு இன்ன விபரங்களுடன் வரவும்..
இதுவரை படிவம் நிரப்பி தராதவரக்ள் இன்று மாலைக்குள் சமர்பிக்கவும் எனவும்..
இதுவரை படிவம் கிடைக்கப்பெறாதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் எனவும் ஏகப்பட்ட பதிவுகள் மூரார்பாது மஹல்லாவாசிகள் தளத்தில்..
இடை இடையே
“அட.. அதெல்லாம் பயப்பட ஒன்னுமில்ல.. நீங்க உங்களுக்கு தெரிந்த விபரத்தோட படிவம் நிரப்பி கொடுத்தாலே போதும். ஏன் இவ்வளவு அலப்பறைகள்” எனவும் ஒரு சிலர் பதிவிட்டனர்.
இடையே தேர்தல் ஆனையம் உங்களின் 2002 ஆண்டு, 2005 ஆம் ஆண்டு விபரம் கூட தேவையில்லை எனவும் அறிவிப்பு செய்தார்கள்.
மேலும், நாள் நீட்டிப்பும் செய்தார்கள். ஆதார்கூட தேவையில்லை என்றார்கள்.
அப்போதும் சிலர் கலகக்குரல்கள் எழும்பிக்கொண்டேதான் இருந்தார்கள்.
“பாய்.. பார்ம் எல்லாம் வாங்குவாங்க.. ஆனா, நம்ம சமூக மக்களின் விபரங்களை நாம் தாக்கல் செய்யவில்லை என நம் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விடுவார்கள்..” என விடாமல் ஓதிக்கொண்டே இருந்தார்கள்.
சரி.. இன்றைய நிலவரம் என்ன..? நாம் நம் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா எனவும்.. நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என எப்போது தெரிந்துக்கொள்ளலாம் எனவும் இங்கே விரிவாக காணலாம்..
கடந்த சில மாதங்களாக எஸ்.ஐ.ஆர் குறித்த பேச்சுகள், தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டது.
இதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பி.எல்.ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும். இதற்காக அரசு அதிகாரிகளும், கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளும் தீவிரமாக செயல்பட்டனர். இந்நிலையில் வாக்காளர்கள் சமர்பித்த எஸ்.ஐ.ஆர் படிவங்கள் அனைத்தும் பி.எல்.ஓக்கள் மூலம் வாக்காளர் சேவை பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு வாக்காளரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தங்களின் படிவம் அப்லோடு செய்யப்பட்டு விட்டதா, தற்போதைய ஸ்டேட்டஸ் என்ன என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
SIR படிவத்தின் ஸ்டேட்டஸை ஆன்லைனில் செக் செய்வது எப்படி?
முதலில் voters.eci.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
Fill Enumeration Form-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் Sign Up செய்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இ-மெயில் வைத்திருந்தால் கொடுக்கலாம். அப்படியே Captcha-ஆஐ சரியாக நிரப்ப வேண்டும்.
இதையடுத்து Login செய்தால் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதையும் பதிவிட்டால் உள்ளே சென்றுவிடலாம்.
அடுத்து வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் EPIC எண்ணை பதிவிட்டு தேட வேண்டும்.
உடனே உங்களின் எஸ்.ஐ.ஆர் படிவத்தின் தற்போதைய நிலை என்னவென்று திரையில் காண்பித்து விடும்.
எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்பிக்கப்பட்டு விட்டால் “Your form has already been submitted” என்று காண்பிக்கும்.
ஒருவேளை மேற்சொன்ன மெசேஜ் காண்பிக்கப்படவில்லை எனில், எஸ்.ஐ.ஆர் படிவம் இன்னும் சமர்பிக்கப்படவில்லை என்று அர்த்தம்.
இதையடுத்து டிசம்பர் 9ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு ஜனவரி 8, 2026 வரை ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால் வாக்காளர்கள் தெரிவிக்கலாம்.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். கருத்து கேட்பு, சரிபார்த்தல் பணிகள் வரும் ஜனவரி 31, 2026 வரை நடைபெற்று, பிப்ரவரி 7ஆம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதுவே 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
அவ்வாறு தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிடுகையில், மறைந்து போன தாத்தா, தாத்தி மற்றும் மற்றோர்களின் பெயர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள் பெயரானது இப்போதைய தீவிர சிறப்பு திருத்தம் காரணமாக பட்டியல் அளிக்காத தொகுதியில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுவிடும்.
எனவே,
“Sir.. எங்க தாத்தி பேரைக் காணோம் Sir”
“Sir.. எங்க தாத்தா பேரைக் காணோம் Sir” என்றோ போய் நிற்காதீர்கள்.
படிவம் கொண்டு போய் சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் சேர்ப்பதில் துவங்கி, வாக்களர்களின் இல்லம் சென்று மிக கவனமாகவும், மிக சிறப்பாகவும் பணிகளை முன்னெடுத்து மூரார்பாது மஹல்லாவாசிகளின் அத்துனை ஐய்யங்களையும் போக்கி 350க்கும் மேற்பட்ட படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உடன் நின்ற மூரார்பாது முஸ்லீம் கல்வி வழிகாட்டி குழுமம் உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் திட்டமிடல் மிக மிக பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள்
மூரார்பாது – My Screen
Admin & Team





Leave a reply