Tuesday, February 24
  • Home
  • Archive
  • Search
💐 இது நம்ம ஊர் கீற்று கொட்டாய் – Zero To Nine ✍️ On Sundays 7 PM – 10.30 PM
Like Haha Love Sad Angry
💐 Murarbadu - My Screen ✍️

💐 இது நம்ம ஊர் கீற்று கொட்டாய் – Zero To Nine ✍️ On Sundays 7 PM – 10.30 PM

  • Home
  • Gallery
  • Contact Form
user avatar
sign in sign up
A password will be e-mailed to you.
Lost password Register Login
or

மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பு # 15-01-2026

Avatar murarbadu@admin
18/01/2026
441 views

MMS – 000202

18-01-2026

✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+91 98840 78865

https://www.murarbadumyscreen.in/wp-content/uploads/2026/01/WhatsApp-Ptt-2026-01-18-at-11.56.23-AM.ogg

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பு

மேற்கானும் அமைப்பு மூரார்பாது – My Screen சகோதர – சகோதரிகளுக்கு பரிச்சையமான ஒரு அமைப்பு

SIR என்கிற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி’ களின்போது நமது மூரார்பாது மஹல்லாவாசிகளின் அச்சமும் ஐயமும் போக்கி படிவம் சமர்பிக்க சமுதாய பேதமின்றி உடன் நின்றவர்கள்.

நாம் நம் மூரார்பாது – My Screen‘னிலும் இது குறித்து பதிவிடுகையில்..

சிறப்பு தீவிர படிவம் என்ன தகவல்களை கோருகிறது என மெத்த படித்தவர்கள்கூட வீடு வீடாக வரும் 4 ஆம் வகுப்பு படித்த அலுவலரிடம் கேள்விகளாக கேட்டு விடை புரியாமல் காத்துக்கிடக்கின்றனர்

“ஏங்க.. புது போட்டோ ஒட்டனுமா..?” என்கிற கேள்விக்கு..

“ம்ம்ம்.. தேவையில்லைதான்.. இருந்தா ஒட்டுங்க.. ஆனா, ஒட்ட வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியங்க.. ஒட்டலன்னாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறேன்..” என பதில் வருகிறது.

” பாய்.. என் பிறந்த வருடம் ஆதார்ல 1982’ன்னு இருக்கு.. வாக்காளர் அடையாள அட்டையில 1983’ன்னு இருக்கு.. நான் இப்ப எழுதனும்..?”

“ம்ம்ம்.. நீங்க உங்க உண்மையான பிறந்த வருடம் எழுதுங்க.. அதே நேரம் ஆதார்ல, வாக்காளர் அடையாள அட்டையில என்ன இருக்கோ அதை எழுதுங்க..” என்பார். கேள்வி கேட்டவருக்கு நாம் ஏன் பிறந்தோம் என்றாகிவிடும்..

“ப்ரோஓஓ.. கணக்கீடு படிவத்தோட நாம நகல் எதுவும் இணைக்க தேவையில்லைன்னு சொல்றாங்க.. நீங்க உங்க நண்பரோட கடைக்கு போய் எல்லாத்தையும் நகல் எடுத்து வர எல்லோர்கிட்டேயும் சொல்றீங்க.. ஏன் ப்ரோ..?” என்றால்

“ஏங்க பாய் ப்ரோஓஓ.. ஒரிஜினல் கொண்டு வந்து அது தொலைஞ்சு போனா என்ன பன்னுவீங்க.. அதான் பாய் ப்ரோஓஓ எல்லாத்துலயும் ஒரு நகல் கேக்குறோம்..” என்பவரிடம்

“ப்ரோஓஓ..எல்லா கூட்டமும் ஜெராக்ஸ் கடையிலதான் இருக்கு.. அங்க ஆவனம் தொலைஞ்சு போகாதா ப்ரோஓஓ..?..” எனக்கேட்பவருக்கு பதில் தராமல் அந்த ப்ரோஓஓ மவுனமாகிவிடுகிறார்.

“சார்.. இந்த SIR Form’ஐ எப்படி Fill பன்றது..?” என கேட்டால் அங்கே கற்பனை குதிரைகள் தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிறது..

“ம்ம்ம்.. தமிழ்லதான் நிரப்ப வேண்டும்..”

“கறுப்பு மை வைத்து எழுதனும்..”

“அப்பா, அம்மா, மனைவி பேர் முதல் மேல் கட்டத்துல இப்ப உள்ளபடி எழுதனும்..”

“இரண்டாம் கட்டத்துல நீங்க 2002/2005’ல் வாக்காளர்னா பேர் எழுதனும்.. இல்லைன்னா அத அப்டியே விட்டுவிட வேண்டும்..” என்றும்..

நூர் முஹம்மது அப்துல் சத்தார்

“பாய்.. நான் நூர் முஹம்மது பாபுஜி பேசுறேன். அம்மாவோட SIR படிவம் எங்கிட்டதான் இருக்கு.. நான் காசிம்கிட்டே கொடுத்துள்ளேன். அம்மாவோட பார்ம் நிரப்பி தரனும்..” எனவும்..

“பாய்.. பார்ம் பார்த்தேன்.. அவங்க 2002’லயே வாக்காளர் என்பதால் அவங்க விபரம் மட்டும் போதும். மேலும், விபரம் இணைக்க வேண்டாம் பாய்..” எனவும்..

“நான் நாளை மூரார்பாதுவில் இருப்பேன். விபரம் தேவை என்பவர்கள் என்னை அனுகலாம்” எனவும் மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பு செய்லாளர் பாபுஜி தொடந்து களத்தில் இயங்கி கொண்டே இருந்தார்.

படிவம் கொண்டு போய் சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் சேர்ப்பதில் துவங்கி, வாக்களர்களின் இல்லம் சென்று மிக கவனமாகவும், மிக சிறப்பாகவும் பணிகளை முன்னெடுத்து மூரார்பாது மஹல்லாவாசிகளின் அத்துனை ஐய்யங்களையும் போக்கி 350க்கும் மேற்பட்ட படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உடன் நின்ற மூரார்பாது முஸ்லீம் கல்வி வழிகாட்டி அமைப்பு உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் திட்டமிடல் மிக மிக பாராட்டத்தக்கது எனவும்..

மூரார்பாதுவில் மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பின் மிக சிறப்பான செயற்பாடுகள் காரணமாக நம் சமுதாய தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் விடுபட வாய்ப்பில்லை என்றே கூறலாம்.

ஜனாப்.நூர் முஹம்மது அப்துல் சத்தார், ஜனாப்.அசன் முகமது, ஜனாப்.தாஜூதீன், ஜனாப். மொய்தீன் கமாலுதீன், ஜனாப்.நூர் முஹம்மது அப்துல் கனி மற்றும் அண்ணார் அன்சர் அலி இப்ராஹிம் போன்றோர்கள் நேரம் ஒதுக்கி மிக சிறப்பாக களமாடினார்கள்.

வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டிருப்போம்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி’ களின்போது – மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிகாட்டி அமைப்பு

அத்துடன் மூரார்பாது முஸ்லிம் கலவி வழிக்காட்டி அமைப்பி’ன் செயற்பாடுகள் ஓய்ந்து போகும் என வெகுஜன மஹல்லாவாசிகள் நினைத்திருக்க அவர்களின் அடுத்த அறிவிப்பாக..
நமது மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிகாட்டி அமைப்பு சார்பாக
கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு நடத்த இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ், அதில் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், தங்கள் வீட்டிலும் தங்கள் உறவினர் வீட்டிலும் இருக்கும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்து மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு பெற அழைக்கின்றோம்.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே,

+91 90030 12431

+91 90802 67309

+91 84899 68255

மேற்கண்ட தொடர்பு எண்களில் எங்கள் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உங்களது மாணவர்களின் முன்பதிவுகளை உறுதி செய்து கொள்ளவும்.

நிகழ்வில் பங்கு கொள்ளும் மாணவர்களும்,
பார்வையாளர்களும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

கல்வியே
இச்சமுகத்தின் பேரொளி.

அழைத்து மகிழும்,
நிர்வாகிகள்
மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பு என்கிற அறிவிப்பு வெளியானது.

ஒரு அமைப்பு ஒரு செயலை எடுத்து செய்ய விரும்பினால் அதற்காக அந்த அமைப்பினர் மட்டுமே செயற்படுவார்கள். மற்றவர்கள் அதனை அப்படியே அடுத்த நிமிடத்தில் கடந்து போய்விடுவே நிறைய வாய்ப்பு இருக்கின்றது. ஆனால், இது ஒரு ஊரின் பொது நிகழ்வாகவே அந்த அமைப்பு சாராத மஹல்லாவாசிகளாலும் பார்க்கப்பட்டது.

உதாரணமாக ஜனாப்.அப்துல் கனி ஆசிரியர் அவர்களை நான் சந்திக்க நேர்ந்த ஒரு பொழுதில் “இன்ஷா அல்லாஹ், இப்படியாக 15ஆம் தேதி சனவரி மாதம் காலை 10 மணியளவில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது, எனவே, அந்நிகழ்ச்சிக்கு வர வேண்டும்” என நம் மஹல்லாவாசி ஒருவருக்கு அழைப்பு விடுத்தார்.

ஆசியராக இருந்தவர். அவருக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கியத்துவம் நன்றாக தெரிகிறது.

நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பு : 14-01-2026

மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பினரின் ஆலோசனை கூட்டம்.

எத்தனை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும்..?

மாணவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் பட்டையினை வகைப்படுத்தவும்..

பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களின் அடையாள அட்டை மற்றும் பட்டையினை வகைப்படுத்தவும்..

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களின் அடையாள அட்டை மற்றும் பட்டையினை வகைப்படுத்தவும் குழுவினர் தீவிரமாக பணி ஆற்றினர்.

வரவேற்று அமுஸ் திருமண மஹாலின் முகப்பில் வரவேற்பு பதாகைகள் வைக்கபட்டது.

கிராஅத் எத்துனை மணிக்கு.?

கல்விக்கான ஆலோசனையுடன் மாணவ – மாணவிகளுக்கான கேள்வி பதில் நேரம்.. என அத்துனையும் முன்பே திட்டமிடப்பட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்க்கப்பட்டது.

நிகழ்வு சிறக்க வாழ்த்தி வரவேற்ற மூரார்பாது – Wings Mart – விங்ஸ் மார்ட்

நிகழ்வு நாள் : 15-01-2026
வியாழக்கிழமை

மூரார்பாதுவில் ஒரு நிக்காஹ் என்றால் எனக்கு அழைப்பு, அழைப்பில்லை என மஹல்லாவாசிகள் பிரிந்து கிடப்பார்கள். மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பு முன்னெடுத்த இந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி’க்கு கல்வியின் முக்கியத்துவம் அறி ந்த பெற்றோர்கள் தன் பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தார்கள்.

இடம் : அமுஸ் திருமண மஹால் – பரமநத்தம் சாலை – மூரார்பாது.

விழா குழுவினருக்கு ஒரு பதட்டம் இருக்கவே செய்திருக்கும்..

வினாடி – வினா புத்தகம்..

வரவேற்பு பதாகை..

அடையாள அட்டை..

பரிசுகள்

மின்னொளி திரை..

ஒளி மற்றும் ஒளி அமைப்பு..

சிறப்பு பேச்சாளர்கள்..

விருந்தினர்கள்..

மற்றும்

புகைப்பட கலைஞர்..
என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து கவணமாக செய்துள்ளோம்.

ஆனாலும், நாம் பெரிதும் எதிர்பார்க்கும் மாணவ செல்வங்கள் வருவார்களா..?

சிறப்பு விருந்தினர்கள் வருவார்களா..?

நிகழ்ச்சி சிறக்குமா..? என பதட்டம் இருக்கவே செய்திருக்கும்.

மெல்ல மெல்ல மாணவர்கள் – பெற்றோர்கள் – விருந்தினர்கள் – பேச்சாளர்கள் என மண்டபம் அந்த காலை வேலை நிரம்ப ஆரம்பித்தது என்கிறார்கள்.

நீண்ட நாட்கள் கழித்து பார்வைக்கு கிடைத்த தன் வெளியூர் மஹல்லாவாசிகளை ஆரத்தழுவி ஸலாம் – துஆ பகிர்ந்துக்கொண்டார்கள் உள்ளூர் மஹல்லாவாசிகள்.

நிகழ்ச்சிக்கான பரபரப்பில் இருந்த ஜனாப்.ரியாஸ் அஹ்மது, ஜனாப்.அன்சர் அலி, ஜனாப்.நூர் முஹம்மது பாபுஜி மற்றும் ஜனப்.மு.மு.பாருக், போன்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சியின் மைய நோக்கம் என்னவென கேட்கலாம் என நினைத்ததை ஒத்திவைத்தோம்.

இன்ஷா அல்லாஹ், நிகழ்ச்சி முடிந்தப்பின் தகவல்களை பெறலாம் என அமைதி காத்தோம்.

நிகழ்வுகளை முடித்த கையோடு நம் தொடர்புக்கு வந்தார் ஜனாப்.ரியாஸ் அஹ்மது.

ஜனாப்.ரியாஸ் அஹ்மது

கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சிக்காகவே கத்தாரிலிருந்து வந்துள்ளார் என அறிந்துக்கொண்டு வாழ்த்துக்கள் கூறி..

” கல்வி குறித்த என்ன படிக்கலாம்..? எங்கு படிக்கலாம் என்கிற கோடி விளக்கங்கள் இன்று வலைதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.. அப்படி இருக்க ஏன்..? எதற்காக இவ்வளவு மெனக்கெடல்..?” என்கிற கேள்வியை முன் வைத்தோம்.

அவருக்கே உரிய ஒரு சிரிப்புடன்
“பாய்.. நீங்க சொல்வதை நான் ஏற்கிறேன். கல்வி குறித்த என்ன படிக்கலாம்..? எங்கு படிக்கலாம் என்கிற கோடி விளக்கங்கள் இன்று வலைதளத்தில் கொட்டிக்கிடக்கின்றனதான். நாம் நம் பிள்ளைகளை நேரில் அழைத்து பேசினால்தானே அவர்களுக்கான பார்வை எதில் இருக்கிறது எனவும், அது சரியா தவறா எனவும் அவர்களுக்கு உணர வைக்கவும் முடியும்.. அதனால்தான் இத்தனை மெனக்கெடல்..” என்றார்.

“நிகழ்ச்சிக்கான ஆதரவு நம் மஹால்லாவாசிகளிடம் ஆராவரமாக இருந்தது என புரிகிறது.. என்ன ஒரு 200 பேர் வந்திருப்பார்களா..?” என அடுத்த கேள்வியை முன்வைத்தோம்.

“பாய்.. இந்த கேள்விக்கு மிக விரிவாகவே விளக்கம் தர விரும்புகிறேன். என்றவர் தரட்டுமா..? என வித்தியாசமாக நம் கேள்விக்கு பதில் தர அனுமதி கேள்வியை நம்மிடம் வைத்தார்.

“இன்ஷா அல்லாஹ், மிக விரிவான பதில் இருக்குமெனில், நீங்கள் உங்கள் அமைப்பின் சார்பாக தரலாம்” என்றோம்.

“மிக நல்லது பாய்.. ஜஜக்கல்லாஹ்..” என்றவர்..
மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிகாட்டி அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
100’க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும்
100’க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், ஜமாத்தார்கள்
மற்றும் விழா குழு அமைப்பினர் இதற்காகவே மும்பை, பெங்களூரு, மற்றும் தமிழ்நாட்டின் இன்ன பிற நகரங்களில் இருந்து வந்திருந்தவர்கள்,
தமுமுகவின் மாவட்ட நிர்வாகிகளுமாக
சுமார் 350 பேர் வரை கலந்து கொண்டனர்
என்றார்.

“அதெல்லாம் சரி.. சிறப்பு பேச்சாளர்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மேடை ஏற்றுவதில் சில சிரமங்கள் இருக்குமே.. அதை எப்படி சமாளீத்தீர்கள்..?” என்றோம்..

“மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தினரை அணுகி சிறப்பு பேச்சாளர்கள் குறித்த அந்த கவலை இல்லாமல் செய்தவர் ஜனாப்.அபுபக்கர் ஷபியுல்லா.

மேலும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தொடர்பிலிருக்கும் மாணவர்களை அவர்கள் கல்லூரி படிப்பை முடித்து பணியில் அமர்த்தும் வரை இவர்களுக்கு கல்வி வழி காட்டுவார்கள் என்பது மற்றோர் தனிச்சிறப்பு.

சிறப்பு பேச்சாளர்கள் இருவரையும் நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூரிலிருந்து காரில் அழைத்து வருவது மற்றும் முதல் நாளே வந்தவர்களை கள்ளக்குறிச்சியில்
தங்க வைத்ததும், மறுநாள் காலையில் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ள செய்ததும், அதற்கான முழு பொறுப்பையும் செலவுகளையும் ஏற்றவர்
ஜனாப் அபுபக்கர் ஷபியுல்லா அவர்கள்தான்.

“மாஷா அல்லாஹ், கூட்டமெல்லாம் சரிதான். அக்கூட்டத்திற்கு நீங்கள் தந்த தகவல் என்ன..? திட்டமிட்டப்படி கூட்டம் ஆரம்பித்ததா..?” என்றோம்..

“பாய்.. என்ன இப்படி கேட்டுட்டீங்க..”? என்ற ரியாஸ் அவர்கள்
” மிக சரியாக காலை பத்து மணிக்கு
கிராத்துடன்
தொடங்கிய நிகழ்வில்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் இரண்டு சிறப்பு பேச்சாளர்களின் சிறப்புரை
PowerPoint காட்சி தொகுப்புகளுடன் துவங்கியது.

முதல் பேச்சாளர் Administration & Education Department போன்ற துறைகளில் எந்த மாதிரியான கல்வியை தேர்ந்தெடுப்பது, கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது, நுழைவுத் தேர்வுகள் தொடர்பான தகவல்களை மாணவர்களிடையே பேசினார்.

இரண்டாவது பேச்சாளர் Information Technology
துறைகளுக்காக எந்த மாதிரியான கல்வியை தேர்ந்தெடுப்பது, கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது, நுழைவுத் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது..? போன்ற விளக்கங்களை தந்தார்.

பின்னர் இரு பேச்சாளர்களும் சேர்ந்து சுமார் 1 மணி நேரம் மாணவர்களுடன் கேள்வி பதில் உரையாடல் நிகழ்ச்சி நடத்தினர். இதில் சிறந்த கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கு பரிசும் அளிக்கப்பட்டது

மதியம் ஒரு மணிக்கு பாங்கு சொல்லப்பட்டு லுகர் தொழுகையும் நடைபெற்றது.

“சரி.. லுஹர் தொழுகையுடன் கூட்டம் முடிவுக்கு வந்துவிட்டதா..? உணவு ஏற்பாடுகள் ஏதும்..?” என்றோம்..

“என்ன பாய். உணவு உபசரிப்பில் நாம் பெயர் பெற்றவர்களாயிற்றே.. உணவு இல்லாமலா..? உணவுகளை மிக மிக விரிவாக ஏற்பாடு செய்திருந்தோம்” என்றவர், “வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கினோம். மாணவர்களுக்கான வினா விடை நிகழ்ச்சி நடத்தி
இதற்காக பரிசுகளும் தரப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கான தனித்திறன் தேர்வு நடைபெற்றது. இதற்காகவும் பரிசுகளும் தரப்பட்டது. மேலும் ,உடனடியாக அறிவிக்கப்பட்ட சில தலைப்புகளில் மாணவர்கள் உரையாற்றினார்கள். அவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

மேலும், S.I.R
பணிகளில்
மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிகாட்டி அமைப்புடன் இணைந்து தன்னார்வலர்களாக சமூக சேவை செய்த 6 நபர்களுக்கு அவர்களது சேவையை பாராட்டும் விதமாக கேடயம் வழங்கப்பட்டது.

மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி
அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் அமைப்பின் நோக்கம், அமைப்பின் செயல்பாடுகள், அமைப்பின் எதிர்கால திட்டம்
போன்றவை குறித்து உரை நிகழ்த்தினார்கள்.

ஜமாத்தார்களும் ஊர் பிரமுகர்களும் மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பு முன்னெடுத்த கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சிக்காக வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.

“மிக விரிவான விளக்கம் ரியாஸ் பாய்.. மேலும், வந்தவர்களை அல்லது நம் மஹல்லாவை சார்ந்த அமைப்புகளை கவுரவித்த நிகழ்வுகள் போன்ற வேறு ஏதேனும் தகவல்கள் உள்ளதா..?” என்றோம்..

“ம்ம்ம்.. நிறைய இருக்கு..” என்றவர்

நமது ஊரைச் சார்ந்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை’யின் பொது நல சேவைக்காகவும்..

மும்பையைச் சார்ந்த Crescent Educational Welfare Society அமைப்புக்கும் பாராட்டு மற்றும்
நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஒரு நினைவு பரிசும் வழங்கப்பட்டதுடன்
நிச்சயப் பரிசாக 100,
வினாடி வினாவுக்காக 20,
தனித்திறன் பரிசாக் 12 மற்றும்
கேள்வி பதிலுக்கான பரிசாக 10 எண்ணிக்கையிலும்
ஆறுதல் பரிசாக 50
என்று சுமார் 200 பரிசுகள் வழங்கப்பட்டது என்றவரிடம்..

“ம்ம்ம்ம்.. பெரும் பொருட் செலவில் செய்துள்ளீர்கள்.. இதற்கான ஆதார தொகையினை எப்படி திரட்டினீர்கள்..?” என்கிற மற்றொரு கேள்வியை முன்வைக்க..

“எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் பாய்.. எங்கள் அமைப்பிலேயே இதனை சரி செய்து கொண்டோம். அமைப்பு சாராதவர்களிடம் ஏதும் பெறக்கூடாது என்கிற மஸூராவின்படி மஹல்லாவாசிகள் எவரிடமும் அன்பளிப்பு தொகையென எதுவும் திரட்டவில்லை.” என்றவர்
மேலும், மண்டப வாடகை பெரும் சவாலாக இருக்கும் என நினைத்த எங்களுக்கு
கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றவுடன் நிகழ்ச்சிக்கு வாடகை இல்லாமல் தன் அமுஸ் திருமண மண்டபத்தை தந்த
முன்னாள் ஜமாத் தலைவர் கொண்டி ஜனாப் அக்பர் பாஷா
அவர்கள் முன் வந்தார். மீண்டும் ஜனாப் அக்பர் பாஷா அவர்களுக்கு இங்கே நன்றியை எங்கள் மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பி‘ன் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்ற ரியாஸ் அஹ்மத் மேலும் கூறுகையில்
“இப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்த பின்னர்
ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும்

தனிமனித ஒழுக்கம்

சமூக ஒற்றுமை

போன்றவற்றிற்காக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் தேசிய கீதம்
மாணவர்களால் பாடப்பட்டு மாலை 6.15 மணியளவில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் 8 மணி நேர நிகழ்வாக இனிதே நிறைவு பெற்றது” என்றவர் மேலும், “இது நடக்காது, நடந்துவிடுமா..? நடக்கட்டும் பார்க்கலாம் என்றவர்கள் கூட இதில் கலந்து கொண்டதுதான் இதன் தனி சிறப்பு..” முடித்துக்கொண்டார்.

மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பின் கல்வி வழிக்காட்டி
நிகழ்ச்சிக்கான மிக விரிவான ஏற்பாடுகளை பார்த்தவர்கள் ஏன் இவ்வளவு பிரமாண்டமான ஏற்பாடுகளாக

வினாடி – வினா புத்தகம்..

வரவேற்பு பதாகை..

அடையாள அட்டை..

மின்னொளி திரை..

ஒளி மற்றும் ஒளி அமைப்பு..

சிறப்பு பேச்சாளர்கள்..

விருந்தினர்கள்..

புகைப்பட கலைஞர்..

உணவு ஏற்பாடு என செய்ய வேண்டும் என நினைத்திருக்கலாம்.

இது வளரும் நம் இளைய தலைமுறைகளுக்கான நிகழ்ச்சி. ஒரு நிகழ்ச்சி என்றால் அது எப்படி திட்டமிடலுடன் செய்யப்பபட வேண்டும் என நாம் நம் இளைய தலைமுறைக்கு எடுத்து காட்டிட வேண்டுமெனில் நாம் அதனை முறையாக அவர்களுக்கு செய்து காட்டிட வேண்டியது மிக அவசியம். எனவே, இது போன்ற முறையான ஏற்பாடுகள் தேவையே என பிரமாண்டமான அதே நேரம் மிக நேர்த்தியான ஏற்பாடுகளை செய்த மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பு உறுப்பினர்களுக்கு உங்களின் சேவைகள் தொடரட்டும் என மூரார்பாது – My Screen’ன் வாழ்த்துக்கள்.

மூரார்பாது – My Screen
Admin & Team

Categories: MMS

Leave a reply

Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Post reactions
Like (1)
Haha (0)
Love (0)
Sad (0)
Angry (0)
Related Posts

தாவடிப்பட்டு மர்ஹூம் ஜனாப். முஹம்மது முஸ்தபா # MMS 000 204

15/02/2026

தங்கமே தங்கம் # MMS 000203

01/02/2026

சுருக்குப் பையும் – உண்டியல் காசும் (Wings to Save Money) # MMS -000202

04/01/2026

தூய ஓட்டு vs தீய ஓட்டு

21/12/2025

“SIR.. எங்க தாத்தி பேரைக் காணோம் SIR”

07/12/2025

SIR.. நீங்க அங்க வாங்க SIR # மூரார்பாது – My Screen

11/11/2025
Post reactions
Like (1)
Haha (0)
Love (0)
Sad (0)
Angry (0)
Related Posts

தாவடிப்பட்டு மர்ஹூம் ஜனாப். முஹம்மது முஸ்தபா # MMS 000 204

15/02/2026

தங்கமே தங்கம் # MMS 000203

01/02/2026

சுருக்குப் பையும் – உண்டியல் காசும் (Wings to Save Money) # MMS -000202

04/01/2026

தூய ஓட்டு vs தீய ஓட்டு

21/12/2025

“SIR.. எங்க தாத்தி பேரைக் காணோம் SIR”

07/12/2025

SIR.. நீங்க அங்க வாங்க SIR # மூரார்பாது – My Screen

11/11/2025
Recent Posts
  • தாவடிப்பட்டு மர்ஹூம் ஜனாப். முஹம்மது முஸ்தபா # MMS 000 204
  • தங்கமே தங்கம் # MMS 000203
  • மூரார்பாது முஸ்லிம் கல்வி வழிக்காட்டி அமைப்பு # 15-01-2026
  • சுருக்குப் பையும் – உண்டியல் காசும் (Wings to Save Money) # MMS -000202
  • தூய ஓட்டு vs தீய ஓட்டு
Recent Comments
  • அப்துல் ஜப்பார் on மூரார்பாது (மன்னர்) வகையறாக்கள் # MMS 000200
  • மர்ஹூம் பாண்டாபடி மதார்ஷா சுலைமான் – 💐 Murarbadu – My Screen ✍️ on ஜனாப்.P.M.சுலைமான் – 3 # MMS 00078
  • மர்ஹூம் பாண்டாபடி மதார்ஷா சுலைமான் – 💐 Murarbadu – My Screen ✍️ on ஜனாப். P.M.சுலைமான் – 2 # MMS 00077
  • மர்ஹூம் பாண்டாபடி மதார்ஷா சுலைமான் – 💐 Murarbadu – My Screen ✍️ on ஜனாப்.P.M.சுலைமான் # MMS 00076
  • Vijayakumar K on கரும்பு # இனிப்பா – கசப்பா # இரவினில் ஓட்டம் # MMS 00104
Archives
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • November 2021
  • October 2021
  • September 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
Categories
  • Featured
  • MMH
  • MMS
Meta
  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Copyright 2021 © Murarbadumyscreen | All Rights Reserved.
  • Home
  • Archive
  • Search