
(மூரார்பாது) தேர்தல் – அன்றும் / இன்றும்
MMS – 000207
19-04-2026

✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
தரவுகளில் உதவி : திரு.நூர் முகமது அப்துல் சத்தார் (பாபுஜி)
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
(மூரார்பாது) தேர்தல் – அன்றும் / இன்றும்
மூரார்பாதுவில் வாக்காளர்கள்
தரவுகளில் 1952’ஆம் ஆண்டு குறித்து தேடும்பொழுது அப்போதைய ஒருங்கினைந்த விழுப்புரம் – கடலூர் மாவட்டமான தென்னாற்காடு மாவட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்து குறிப்புகள் ஏதும் இல்லை.
இருப்பினும் கடந்த 2002 ஆம் ஆண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் தரவுகள் மூரார்பாது வாக்காளர்கள் குறித்து என்ன சொல்கிறது என பார்ப்போம்.
2002ஆம் ஆண்டின் வாக்களர் தீவிர சிறப்பு திருத்தத்தின்படி மூரார்பாதுவில் பாகம் 135’ல் வாக்காளர்களின் எண்ணிக்கை 1221 ஆக இருந்துள்ளது.
ஆண் வாக்காளர்கள் – 612 எனவும்,
பெண் வாக்காளர்கள் – 609
எனவும்
பாகம் 136’ல் வாக்காளர்களின் எண்ணிக்கை 1190 ஆக இருந்துள்ளது.
ஆண் வாக்காளர்கள் – 614 எனவும்,
பெண் வாக்காளர்கள் – 576
எனவும்
மூரார்பாது எல்லை பரமனத்தம் பாகம் எண் : 165’ல் வாக்காளர்களின் எண்ணிக்கை 1097 ஆக இருந்துள்ளது.
ஆண் வாக்காளர்கள் – 527 எனவும்,
பெண் வாக்காளர்கள் – 520
எனவும்
மூரார்பாது எல்லை
பரமனத்தம் பாகம் 166’ல் வாக்காளர்களின் எண்ணிக்கை 1145 ஆக இருந்துள்ளது.
ஆண் வாக்காளர்கள் – 550 எனவும்,
பெண் வாக்காளர்கள் – 595
எனவும் வாக்காளர்கள் இருந்துள்ளனர்.
சங்கராபுரம் தொகுதி யார் யார் வசப்பட்டது என மிக விரிவாக காணலாம்.
அதற்கு முன் சட்டமன்ற தேர்தல் முதன் முதலாக எப்போது நடந்தது, கட்சிகளின் நிலை என்ன என்கிற ஒரு குறிப்பை கீழே காணலாம்.
1952 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் (தற்போதைய தமிழகம், ஆந்திரா, கேரளாவின் சில பகுதிகள் உள்ளடக்கியது), இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் ஜனநாயகத் தேர்தல் ஆகும். ஜனவரி 1952-ல் நடைபெற்ற இந்தத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை பெறவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. ராஜகோபாலாச்சாரி என்கிற ராஜாஜி அவர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் பிற கட்சிகளின் வலுவான எதிர்ப்பிற்கு மத்தியில், சுயேட்சைகளின் ஆதரவுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1952 சட்டமன்றத் தேர்தல் முக்கிய அம்சங்கள் மற்றும்
தேர்தல் 1952 ஜனவரி 2 முதல் ஜனவரி 25 வரை 9 நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக மொத்தம் 375 இடங்கள் இருந்தது.
முடிவுகள்:
இந்திய தேசிய காங்கிரஸ்: 152 இடங்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI): 62 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்கிற KMPP 35 இடங்கள் வெற்றி பெற்றன.
பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சி. ராஜகோபாலாச்சாரி என்கிற ராஜாஜி காங்கிரஸ் சார்பில் முதலமைச்சரானார்.
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் மற்றும் கல்விக்கொள்கைக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக, 1954-ல் அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்தியக் குடியரசின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1951-1952 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 25ஆம் நாள் தொடங்கி 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் வரை 68 கட்டங்களாக நடைபெற்றது. இந்திய தேர்தல் வரலாற்றில் நீண்ட காலம் நடந்த இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 10 கோடி. இத்தேர்தல் சில ஆவணங்களில் “இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952” என்றும் குறிப்பிடப்படுகிறது. இத்தேர்தலின்பொழுது சுகுமார் சென் என்பவர் தேர்தல் ஆணையராக இருந்தார். இத்தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட்டது. வடஇந்தியாவைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் பெண்கள் பெயரே இல்லை. மாறாக, இன்னார் மகள், இன்னார் மனைவி என்றே சுமார் 28 இலட்சம் பெண்கள் குறிக்கப்பட்டிருந்தனர். அதனைக் கண்ணுற்ற சுகுமார்சென் அப்பட்டியலை நீக்கிவிட்டு பெண்களின் உண்மையான பெயர்களைக்கொண்ட வாக்காளர் பட்டியலை உருவாக்கினார். இத்தேர்தலில் வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களைக்கொண்டு முதலாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 364 தொகுதிகளில் வென்று முதலிடத்தில் வந்தது. ஜவகர்லால் நேரு இந்தியக் குடியரசின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரானார். (நேரு இந்தியா குடியரசாவதற்கு முன்பே இந்தியாவின் பிரதமாராகியிருந்தார்)
சரி, நம் மூரார்பாதுவிற்கு உட்பட்ட சங்கராபுரம் தொகுதி குறித்து காணலாம்.
1962 தேர்தல் மற்றும் அதற்கு பிறகான தேர்தல் குறித்த தகவல்கள்
1962’ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் திரு.கே.பார்த்தசாரதியும்,
1967’ஆம் ஆண்டு திமுகவின் திரு.பச்சயப்பன் அவர்களும்,
1971’ஆம் ஆண்டு திமுகவின் திரு நாச்சியப்பனும்,
1977’ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸின் திரு துரை முத்துசாமியும்,
19780 & 1984’ஆம் ஆண்டு அதிமுகவின் திரு கலிதீர்த்தானும்,
1988’ஆம் ஆண்டு திமுகவின் திரு முத்தையனும்,
1991’ஆம் ஆண்டு அதிமுகவின் திரு.ராமசாமியும்
1996’ஆம் ஆண்டு திமுகவின் தா.உதயசூரியனும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டனி கலச்சாரம் காரணமாக அதிமுக மற்றும் திமுக அல்லாத வேறோர் கட்சியாக 2001 ஆம் ஆண்டு காசம்பு பூமாலை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றார்.
2006’ஆம் ஆண்டு திமுகவின் அங்கயற்கண்ணி யும்
2011’ஆம் ஆண்டு அதிமுகவின் திரு மோகனும்,
2016 மற்றும் 2021’ஆம் வருடங்களில் திமுகவின் திரு.தா.உதயசூரியன் அவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்றுள்ளார்கள் எனினும் வெற்றி சதவிகிதம் திமுகவிற்கே அதிகம் எனலாம்.
2021 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்
திரு தா உதயசூரியன் அவர்கள் கூட்டனி பலத்தால் 56.2% வாக்குகள் பெற்று 45,963/- வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்.
- திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் திரு தா.உதயசூரியன் – வயது 62 அவர்கள் போட்டியிடுகிறார். படிப்பு இளங்கலை, சொத்து மதிப்பு 2.65 கோடி
- அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திரு ராகேஷ் – வயது 38 அவர்கள் போட்டியிடுகிறார். படிப்பு வழிக்கறிஞர் ( முடிக்கவில்லை ) சொத்து மதிப்பு 61.40 லட்சங்கள்
- நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் திரு ரமேஷ் – வயது 35 அவர்கள் போட்டியிடுகிறார். படிப்பு பத்தாம் வகுப்பு, சொத்து மதிப்பு 58.46 லட்சங்கள்
- தமிழக வெற்றி கழகத்தில் திரு ஏ.ஜெகதீசன் – வயது 53 அவர்கள் போட்டியிடுகிறார். படிப்பு குறுங்கலை சினிமா தொழிற்படிப்பு, சொத்து மதிப்பு 1.03 கோடி ஆகும்.
தேர்தல்கள் அன்றும் – இன்றும்
அன்றைய தேர்தல் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்தெடுக்கும் நடை முறையில் வாக்காளர்கள் கட்சியை தவிர்த்து தன் தொகுதியில் யார் நல்லவர் என பார்த்து வாக்களிப்பார்கள். மெல்ல மெல்ல அரசியல் கட்சிகளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக கட்சி அறிவிப்பவரை வெற்றி பெற வைல்கிறார்கள். ஓட்டுக்கு பணம் பொருள் என்கிற விசயங்களெல்லாம்அக்காலத்தில் கிடையாது. ஒரு வேட்பாளர் தன் தனி மனித நற்பெயரின் காரணமாக சுயேட்சையாககூட வெற்றி பெறுவார்.
இப்போது கோடிகளில் செலவும், பிரதான கட்சியில் சீட்டும் அவசியம். நல்லவர்கள் தோற்பதும் தீயவர்கள் பண பலத்தால் மட்டுமே வெற்றி பெறுவதும் மிக சாதாரனமாகி விட்டது.
2026’ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெறும் சங்கராபுரம் சட்டமன்ற தேர்தலில் 20+ கட்சிகள் / சுயேட்சைகள் போட்டியிட்டாலும் மிக பிரதானமாக அறியப்படுவது
திமுக
அதிமுக
நாம் தமிழர் கட்சி
மற்றும்
தமிழக வெற்றி கழகம் போன்ற கட்சிகளே..
வெல்லப்போவது யார்..?
காத்திருங்கள் மே மாதம் 4 ஆம் நாள்வரை
.
அதற்கு முன்
வாக்களிப்பது நம் கடமை..
வாக்களிப்போம்
தேசம் காப்போம்
தேர்தல் நாள் – ஏப்ரல் 23/2026
மூரார்பாது – My Home
Admin & Team









Leave a reply