
க(ள்)ள ஆட்டம் – 2026
MMS – 000207
03-05-2026

✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
+91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
க(ள்)ள ஆட்டம் – 2026
ஆட்டக்காரர்களும் – ஆடிப்போனவர்களும்
கபடி கபடி கபடி..
கபடி என்கிற சடுகுடு ஆட்டம் தமிழகத்தின் பாரம்பரியமான, இரு அணிகளுக்கு இடையே விளையாடப்படும் ஒரு துடிப்பான விளையாட்டு. இது உடல் வலிமை, மூச்சுக்கட்டுப்பாடு, சுறுசுறுப்பு மற்றும் தந்திரமான தற்காப்புத் திறனை அடிப்படையாகக் கொண்டது. தலா 7 வீரர்கள் கொண்ட இரு அணிகள், தட்டையான மைதானத்தில், எதிரணியின் ஆடுகளத்திற்குள் சென்று புள்ளிகளைப் பெற விளையாடுகின்ற விளையாட்டாகும்.
கபடி என்கிற பெயரானது
கை+பிடி = கபடி என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.
ஒரு அணியின் வீரர் எதிரணிக்குச் சென்று, ‘கபடி கபடி கபடி..’ என்று மூச்சு விடாமல் பாடி, எதிரணியினரைத் தொட்டு அவரிடம் மாட்டாமல் மீண்டு மீண்டும் தன் களம் திரும்பி புள்ளிகளைப் பெற வேண்டும். அப்படிச் சென்றவர் மூச்சு விட்டால் அல்லது பிடிபட்டால் ஆட்டமிழப்பார்.
இதற்கு நிகரானதே அரசியல் களமும் எனலாம். எப்படி அணியின் தலைவர் ஒருவரை அனுப்பி வெற்றி புள்ளிகளை பெற்றுவர தன் அணியின் திறமையான ஆட்டக்காரரை அனுப்பி புள்ளி பெறுகிறாரோ அதற்கு நிகரே தான் விரும்பும் ஒரு செல்வாக்கு மிக்க ஒருவரை ஒரு தொகுதிக்கு தன் அணியின் வேட்பாளராக அனுப்பி பல க(ள்)ள ஆட்டமாடி வெற்றியுடன் வர பணிக்கிறார்.
தேர்தல் களம் 2026
கபடியில் இரு அணிகள் எனில் இங்கு அணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை. பெரும்பாலும் மூன்று அணிகள் ஆடிய தமிழக தேர்தல் கபடி களத்தில் இம்முறை நான்கு அணிகள் ஆட்டம் காட்டியுள்ளன.
திராவிட முன்னேற்ற கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) செப்டம்பர் 17, 1949-ல் பேரறிஞர் அண்ணாதுரையால் தொடங்கப்பட்ட, தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் திராவிட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட முக்கிய அரசியல் கட்சியாகும். பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, தேர்தல் அரசியலில் ஈடுபட்டு, 1967-ல் முதன்முதலாக ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் தலைமையில், சமூக சீர்திருத்தம் மற்றும் மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது.
1949 செப்டம்பர் 17-ல் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் அண்ணாதுரை திமுகவை தொடங்கினார். சமூக நீதி, சமத்துவம், இந்தி எதிர்ப்பு, திராவிட மாடல் மற்றும் மாநில சுயாட்சியே கொள்கையாக அறிவித்தனர்.
1967-ல் அண்ணாதுரை தலைமையில் முதல்முறையாக ஆட்சி அமைத்தது. இது காங்கிரஸ் அல்லாத முதல் பெரிய கட்சி வெற்றியாகும்.
கலைஞர் காலம் (1969-2018): அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி தலைவரானார். 5 முறை முதலமைச்சராக பதவி வகித்து, நவீன தமிழ்நாட்டை உருவாக்கினார்.
மு.க. ஸ்டாலின் தன் தலைமையில் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்று, திராவிட மாடல் ஆட்சியை வழிநடத்துகிறார்.
சாதனைகள் எனில் இலவசக் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை, இட ஒதுக்கீடு, மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது எனலாம். திமுக சமூக சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் தேர்தல் அரசியல் மூலமாக தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) எம்.ஜி. ராமச்சந்திரனால் (எம்ஜிஆர்) 1972 அக்டோபர் 17 அன்று திமுகவில் இருந்து பிரிந்து தொடங்கப்பட்டது. இது 1977-ல் முதன்முதலில் தமிழக ஆட்சியைப் பிடித்தது, பின்னர் எம்ஜிஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா தலைமையின் கீழ் பலமுறை ஆட்சி செய்து, தமிழகத்தின் மிக முக்கியமான, சமூக நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட பிராந்திய கட்சியாக வளர்ந்தது.
அதிமுக வரலாற்றின் முக்கிய அம்சங்கள்: தோற்றம் (1972): திமுகவில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மற்றும் எம்ஜிஆரின் செல்வாக்கு காரணமாக, மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், அக்டோபர் 17, 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
முதல் வெற்றி (1973): தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதங்களில், திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுக பிரம்மாண்ட வெற்றி பெற்று தன்னை நிலைநிறுத்தியது.
எம்ஜிஆர் ஆட்சி (1977-1987): 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வெற்றி பெற்று, எம்ஜிஆர் முதல்வரானார். அவர் மறைவு வரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்தார்.
ஜெயலலிதா காலம் (1989-2016): எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு, ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை வழிநடத்தினார். 1991, 2001, 2006 (எதிர்க்கட்சி), 2011, 2016 எனத் தொடர்ந்து வலுவான சக்தியாகத் திகழ்ந்தார்.
வளர்ச்சி: சமூக நீதி, ஏழை எளியோர் நலன், மகளிர் பாதுகாப்பு, மற்றும் கல்வி, சுகாதாரம் சார்ந்த பல்வேறு நலத் திட்டங்கள் கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
தற்போதைய நிலை: ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, தற்போது எடப்பாடி கே. பழனிசாமி என்கிற இபிஎஸ் பொதுச்செயலாளராகக் கட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி (நாதக) மே 18, 2010 அன்று செந்தமிழன் சீமானால் தொடங்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சியாகும். இது ஈழத் தமிழர் ஆதரவு, தமிழ் தேசியம், மற்றும் தமிழ்நாட்டில் மாற்றரசியல் ஆகிய கொள்கைகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
2016 முதல் தனித்துப் போட்டியிட்டு, தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய அரசியல் சக்தியாக, படிப்படியாக வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி வரலாறு
தொடக்கத்தில் இது ஒரு போராட்ட இயக்கமாகவே இருந்தது.
“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முழக்கத்துடன், தமிழ்த் தேசியக் கொள்கை, “மாற்றம், முன்னேற்றம்” என்ற முழக்கத்துடன், சாதி மத சார்பற்ற, தனித்து இயங்கும் அரசியல் கட்சியாகச் செயல்படுகிறது.
2016 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகத் தனித்துப் போட்டியிட்டு, சுமார் 4.58 லட்சம் வாக்குகளைப் (1.10%) பெற்றது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்டு 3.89% வாக்கு வங்கியைப் பெற்றது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72% வாக்கு விழுக்காட்டைப் பெற்று, தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்தது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.35% என தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து அதிகரித்து, மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்று 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது.
சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார். இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, மகளிர் பாசறை போன்ற பல்வேறு அமைப்புகளைக் கொண்டுள்ளது.இக்கட்சி தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து, இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவைத் திரட்டி வருகிறது.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய், பிப்ரவரி 2, 2024 அன்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படும் பிராந்தியக் கட்சியாக இது உருவெடுத்துள்ளது. முன்னதாக, 2009-ல் தொடங்கப்பட்ட ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலம் மக்கள் பணியில் ஈடுபட்டார்.
மதச்சார்பின்மை, சமூக சீர்திருத்தம் மற்றும் பெரியார், காமராஜர், பி.ஆர். அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கொள்கைகள் மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் சம உரிமை.பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி மற்றும் பகுத்தறிவுச் சிந்தனை.திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக “மூன்றாவது துருவம்” என்ற இலக்குடன் பயணிப்பதே கட்சியின் கொள்கை என அறிவிக்கபட்டுள்ளது.
2021 தேர்தலில் கட்சிகள் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 75 இடங்களை வென்றது.
234 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் திமுக 133 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை தலா 2 இடங்களையும் பெற்றன.
அதிமுக கூட்டணிக்கு 75 இடங்கள் கிடைத்தன. அதில் அதிமுக-66, பாஜக-4, பாமக-5 இடங்களையும் வென்றன.
தமிழக தேர்தல் 2026

தலைவர்களாக திமுக’வின்
திரு ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியிலும்,
அதிமுக’வின்
திரு.பழனிச்சாமி அவர்கள் எடப்பாடி தொகுதியிலும்,
நாம் தமிழர் கட்சியின்
திரு சீமான் அவர்கள் காரைக்குடி தொகுதியிலும்,
தமிழக வெற்றி கழகத்தின்
திரு ஜோசப் விஜய் அவர்கள் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டனர்.
தமிழ்நாடு எத்துனையோ தேர்தல்களை சந்தித்திருந்தாலும் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் மிக வித்தியாசமான தேர்தல் என பெரும்பான்மையானவர்களின் கருத்தாக இருந்தது.
காரணம் 4 முனை போட்டி என்பதோடு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஏன் எதற்காக வாக்களிக்கிறோம் என்பதே தெரியாமல் வாக்களித்தவர்கள் இதை வித்தியாசமான தேர்தலாக்கி விட்டார்கள்.
அரசியல் அறிவு சிறிதும் இல்லாமல்
கூடும் கூட்டதில் டிவிகே டிவிகே டிவிகே என கத்தி ஒரே அலப்பறை செய்வதும், தமிழ்நாட்டில் எத்துனை சட்டமன்ற தொகுதிகள் உள்ளது என்றோ, ஆட்சி அமைக்க எத்தனை தொகுதிகள் வேண்டும் என்றோ, தன் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யார் என்றோகூட தெரியாமல் தனக்கு பிடித்தவர் தலைவர் என்பதால் கொள்கை – தேர்தல் வாக்குறுதி என எது குறித்தும் ஆராயாமல் ஆதரித்த இளைய தலைமுறையை பார்த்த தேர்தலும் இதுதான் எனலாம்.
சரி, சங்கராபுரம் தொகுதிக்கு வரலாம்..
1962’ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் திரு.கே.பார்த்தசாரதியும்,
1967’ஆம் ஆண்டு திமுகவின் திரு.பச்சயப்பன் அவர்களும்,
1971’ஆம் ஆண்டு திமுகவின் திரு நாச்சியப்பனும்,
1977’ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸின் திரு துரை முத்துசாமியும்,
19780 & 1984’ஆம் ஆண்டு அதிமுகவின் திரு கலிதீர்த்தானும்,
1988’ஆம் ஆண்டு திமுகவின் திரு முத்தையனும்,
1991’ஆம் ஆண்டு அதிமுகவின் திரு.ராமசாமியும்
1996’ஆம் ஆண்டு திமுகவின் தா.உதயசூரியனும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டனி கலச்சாரம் காரணமாக அதிமுக மற்றும் திமுக அல்லாத வேறோர் கட்சியாக 2001 ஆம் ஆண்டு காசம்பு பூமாலை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றார்.
2006’ஆம் ஆண்டு திமுகவின் அங்கயற்கண்ணி யும்
2011’ஆம் ஆண்டு அதிமுகவின் திரு மோகனும்,
2016 மற்றும் 2021’ஆம் வருடங்களில் திமுகவின் திரு.தா.உதயசூரியன் அவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்றுள்ளார்கள் எனினும் வெற்றி சதவிகிதம் திமுகவிற்கே அதிகம் எனலாம்.
2021 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகள்
திரு தா உதயசூரியன் அவர்கள் கூட்டனி பலத்தால் 56.2% வாக்குகள் பெற்று 45,963/- வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் திரு தா.உதயசூரியன் அவர்களும்..
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திரு ராகேஷ் அவர்களும்..
நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் திரு ரமேஷ் அவர்களும்..
தமிழக வெற்றி கழகத்தில் திரு ஏ.ஜெகதீசன் அவர்களும் என 4 பேர் பிரதான கட்சிகளில் போட்டியிடுயிடுகிறார்கள்.
சங்கராபுரம் தொகுதியில் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகளே இதுவரை வென்றுள்ளன. இதில் பாமக கூட்டணி பலத்தால் வென்றது எனலாம்.
சங்கராபுரம் சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்..? ஏன்..எப்படி என்கிற கேள்வி எழுந்தாலும் திமுகவின் தா.உதயசூரியன் அவர்களே வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி.. ?
கூட்டனி பலம் மற்றும் தவெக , நாம் தமிழர் பிரிக்கும் ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள்..
ஏன்..?
மூரார்பாது கிராமம் தா.உதயசூரியன் அவர்களுக்கு எப்போதுமே மனதுக்கு மிக நெருக்கமான ஊர்தான். மேலும், நம் வாக்குகள் சிதறினால் பி.ஜே.பி உள்ளே வந்துவிடும் என்கிற இஸ்லாமியர்கள் ஒருமித்த கருத்தால் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் உதயசூரியன் சின்னத்திற்கே கடந்த 15 வருடங்களாக கிடைப்பதுமேயாகும்.
இரண்டாம் இடத்திற்கு அதிமுகவும், மூன்றாம் இடம் தவெகவிற்கும் கிடைக்கலாம்.
சரி, தமிழ்நாடு முடிவு எப்படி இருக்கும்..?
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலானவை திமுக கூட்டனி ஆட்சி அமைக்கும் என்கிறது,
ஒரு சில அதிமுக கூட்டனி ஆட்சி என்கிறது
ஒன்றே ஒன்றானா இந்தியா டுடே தவெக ஆட்சி அமைக்கும் என்கிறது.
சரி, உங்கள் பார்வையில் கட்சிகள் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக பெறப்போகும் வெற்றி எண்ணிக்கை என்ன..?
சீமான் காரைக்குடியில் வெற்றி பெறுவாரா..? ஏன் ..? எப்படி..?
விஜய் கதை என்னவாகும்..?
இரண்டு தொகுதியில் போட்டியிடும் அவர் இரண்டிலும் வெல்வாரா.. அல்லது ஒன்றில் வெல்வாரா..? அல்லது இரண்டுமே தோல்வியா..?
தேர்தல் – 2026 என்கிற இந்த க(ள்)ள ஆட்டத்தில்
ஆ(ஓ)ட்டக்காரர்கள் யார்..? ஆ(ஓ)டப்போகப்போகிறவர்கள் யார்..?
கபடி.. கபடி.. கபடி.. கபடி
கணிக்க முடிகிறதா..? ஆம், எனில் காரணத்துடன் விளக்குங்கள்.
மூரார்பாது – My Screen
Admin & Team







Leave a reply