
கனவில் மிதக்கும் கனவுகள் # MMS 000209
MMS – 000209
07-06-2026
✍️ அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+91 98840 78865
மூரார்பாது ஆசிரியர்கள் என்கிற தலைப்பில் மூரார்பாது – My Screen’ல் 13-09-2020’ல் 66’வது பதிவாக பதிவிட்டிருப்போம்.
அதில்.. மூரார்பாதுவில் நாம் அறிந்த மற்றும் நமது மூரார்பாது பள்ளியில் பணியாற்றிய..
ஜனாப்.அப்துல் மஜீத் – வரலாறு ஆசிரியர்
ஜனாப்.அப்துல் கரீம் – ஆசிரியர்
ஜனாப்.ஜானி முஸ்தபா தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி மூரார்பாது
ஜனாப்.முஸ்தபா – ஆசிரியர்
மொஹ்தர்மா பாத்திமா அப்துல் மஜீத் – மூரார்பாது உருது பள்ளி தலைமை ஆசிரியை..
ஜனாப்.அப்துல் கனி (கடுவு) – உருது பள்ளி ஆங்கில ஆசிரியர். அதீத ஆங்கில புலமை பெற்றவர்.
ஜனாப்.அப்துல் ரஜாக் (கடுவு) – தறி மற்றும் நீதிக்கதைகள் ஆசிரியர்
ஜனாப்.அப்துல் ரஜாக் – உடற்பயிற்சி ஆசிரியர், பரமநத்தம்
ஜனாப்.அபுபக்கர் – ஆங்கில ஆசிரியர்
ஜனாப். கமால் பாஷா – உடற்பயிற்சி ஆசிரியர்
மொஹ்தர்மா பாத்திமா கமால் பாஷா – நல்லன தேடலும், அதன் பொருட்டு நாம் தரும் உழைப்புமே நம்மை உயர்த்தும் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் சேர்க்கும் என்பவர், தன் கல்வியை MA, BED., எனவும் மேலும் மேலும் உயர்த்திக் கொண்டவர்.
ஜனாப்.ரஹமதுல்லா – அறிவியல் ஆசிரியர்
ஜனாப்.ஹாலிக் – உடற்பயிற்சி ஆசிரியர்
மொஹ்தர்மா ரஹ்மான் பீ அலாவுதீன் – தலைமை ஆசிரியையாக பணி ஓய்வு பெற்றவர்
மொஹ்தர்மா ரஹிமான் பீ – அரபி தனியார் வகுப்பு ஆசிரியை, ஜனாப்.மு.மு.பாருக – மொஹ்தர்மா பல்கீஸ் பீ ஆகியோர்களின் தாயார்.
மொஹ்தர்மா ஜரீனா ராஜ் முஹம்மது – மூரார்பாது மருமகள், தற்போது பள்ளி தலைமை ஆசிரியையாக ரிஷிவந்தியம் பள்ளியில் பணி புரிகிறார். Mrs.ஜரீனா அவர்கள் “ஆண் பிள்ளைகள் பற்றி நான் கருத்து சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. பெண் பிள்ளைகள் எத்துனை பேர் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு கல்வியை தாருங்கள். அவர்கள் வாழ்வினை அவர்களாகவே சிறப்பாக்கி கொள்வார்கள்” என்கிறார்.
ஜனாப். அ.முஹமது கவுஸ்
நமது ஊர் மூரார்பாது இராணுவ வீரர் ஜனாப்.அலாவுதீன் – Mrs.ரஹ்மான் பீ தம்பதிகளுக்கு மகனாக 21.03.1983’ல் பிறந்தவர். மூரார்பாது, சங்கராபுரம் மற்றும் தேவ பாண்டலத்தில் பள்ளி படிப்பினையும் பெரம்பலூர் , திருச்சி மற்றும் நாமக்கல்லில் தன் இளங்கலை , முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பிலும் பட்டம் பெற்றுள்ளார். மேலும், 2006 முதல் 2008 வரை சேலம் பெரியார் பல்கலையில் M.Phil, MA.Edu & M.Sc (Psy) வரையிலான பட்டம் பெற்றவர்.
ஜனாப்.அன்சர் அலி இப்ராஹிம்
2010’ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக கடுவனூரில் ஆசிரியர் பணியில் இணைந்தவர்.
“நம் சமூகத்தில் பெண் பிள்ளைகளை படிக்க வைத்தல் ஒரு பெற்றோரின் கடமை என பெற்றோர்கள் எண்ண வேண்டும் என்கிறார். மேலும் , பெண் தேடும் மாப்பிள்ளை வீட்ட்டார் பெண் படித்தவராக இருந்து 25 – 28 வயது எனினும் பெண் எடுக்க முன்வர வேண்டும். இந்த மன மாற்றம் நிகழாத வரை பெண் குழந்தைகளைப் பெற்றோர் தன் பிள்ளைகளை மேல் படிப்பு படிக்க வைக்க மாட்டார்கள். எனவே, மாற்றம் எல்லா திசைகளிலும் வர வேண்டும்” என்கிறார் ஜனாப்.அன்சர் அலி.
ஆசிரியை ( எ) வஹிதா அக்கா
மூரார்பாது தனியார் பாட சேவையில் இவரது Tuition நிறைய மாணவர்களால் மறக்க முடியாத ஒன்று. மிகச்சிறப்பான முறையில் 1985 – 95 வாக்கில் வகுப்பு வாரியாக Tuition அமைத்து எடுத்தவர் எனக்கூறப்படுகிறது.
மொஹ்தர்மா.ஷகிலா கவுஸ்
மூரார்பாது மருமகள். BA, B.Ed, மற்றும் MA முடித்தவர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர் 2014 ஆம் ஆண்டு அரசு மேல் நிலைப்பள்ளி பொய்குனத்தில் ஆங்கில ஆசிரியையாக பணி ஆனை பெற்றார். திருமணத்திற்கு பின்னரும் இவர் எடுத்த முனைப்பும் கணவரின் ஊக்குவிப்புமே இன்று இவர் மேற்படிப்புகள் படிக்கவும் ஆசிரியையாகவும் பணி புரிய காரணம். ”வேலை என்பதற்காக மட்டுமில்லாமல் சமூகம் புரிந்து கொள்ளவும் பெண்களுக்கு கல்வி அவசியம்” என்கிறார் Mrs.ஷகீலா கவுஸ் ஆசிரியை அவர்கள் என மூரார்பாது சார்ந்த ஆசிரிய – ஆசிரியைகள் குறித்தும், நம் மஹல்லாவை சார்ந்தவர்கள் இதர ஊர்களில் ஆசிரியராக பணியாற்றுவது குறித்தும் பதிவிட்டிருப்போம்..
அந்த வரிசையில்
ஜனாப்.அலாவுதீன் முஹம்மது கவுஸ் குறித்த பதிவில்..
ஜனாப். அ.முஹமது கவுஸ்
நமது ஊர் மூரார்பாது இராணுவ வீரர் ஜனாப்.அலாவுதீன் – ஆசிரியை.ரஹ்மான் பீ தம்பதிகளுக்கு மகனாக 21.03.1983’ல் பிறந்தவர். மூரார்பாது, சங்கராபுரம் மற்றும் தேவ பாண்டலத்தில் பள்ளி படிப்பினையும் பெரம்பலூர் , திருச்சி மற்றும் நாமக்கல்லில் தன் இளங்கலை , முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பிலும் பட்டம் பெற்றுள்ளார். மேலும், 2006 முதல் 2008 வரை சேலம் பெரியார் பல்கலையில் M.Phil, MA.Edu & M.Sc (Psy) வரையிலான பட்டம் பெற்றவர்.
25.08.2008’ல் அரியலூர் அரசு மேல் நிலை பள்ளியில் பணியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக சேர்ந்துள்ளார்.
பின்னர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பணி மாற்றம் பெற்றவர் இன்றளவும் அங்கேயே பணி புரிகிறார்.
“பெண்கள் என்றில்லை ஆண்களும் கல்வியில் அதன் உயரம் அடைய முயற்சிக்க வேண்டும். உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் கிடைத்தால் மிக நல்லது.அல்லாஹ்வின் மீது பயம் இருந்தால் அவர்கள் தனி மனித ஒழுக்கத்தில் சிறந்து தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். உயர் படிப்புக்காக +2 முடித்தபின்னர் 7 வருடம் கல்விக்கான பாதையில் அவர்கள் செலவிட அவர்களின் பெற்றோர்கள் மிக நெருங்கிய உறவுகள் முன் வர வேண்டும். திருமண வயது என்பது 25+ என்றோ அல்லது 23+ என்றோ மாற்றிக்கொள்ள மனதளவில் முன் வருதல் மிக முக்கியம்” என்கிறார். ஜனாப்.முஹமது கவுஸ் என பதிவிட்டிருப்போம்.
மிக சமீபத்திய மகிழ்ச்சி செய்தியாக உதவி தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து தான் பயின்ற சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த வந்த பாதையை எப்படி உணர்கிறீர்கள் என்கிற கேள்வியுடன் மேலும் சில கேள்விகள் இனைத்து ஜனாப்.முஹம்மது கவுஸ் அவர்களிடமிருந்து பதில்கள் பெற்றோம்.
“மூரார்பாது – My Screen சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய சலாம் மற்றும் துஆ என ஆரம்பித்தவர் “என் கல்வி பணியானது ஆகச்சிறந்த மன திருப்தியை எனக்கு அளிக்கிறது.”
“நம் சமுதாய பெண் பிள்ளைகள் என்றில்லாமல் பொதுவாக பெண் பிள்ளைகள் தன் குடும்பம் பிரிந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் உள்ள கல்வியை.. குறிப்பாக பொறியியல் படிப்புகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.”
“சரி, பெண் பிள்ளைகள் வேறு என்ன படிக்கலாம்..?” என்கிற கேள்விக்கு. .
ஒரு 75% அல்லது 80℅ எடுக்கும் மாணவ – மாணவியரை.. உதாரணமாக 480/600 எடுப்பவரை NEET’க்காக தயார் படுத்துவது பெரும்பாலும் பயன் அளிக்காது. நடப்பு ஆண்டில் முயற்சி செய்யலாம். இல்லை எனில் அவர்களுக்கான ஆர்வம் அறிந்து அவர்கள் போக்கில் கல்விக்கான பாதை அமைத்து தரலாம்.
அதே நேரத்தில் 95% + எடுக்கும் மாணவ மாணவியர்கள் NEET தேர்வில் நடப்பு ஆண்டில் முயற்சிக்கலாம். அதில் வெற்றி கிடைக்கவில்லை எனில் அடுத்த ஒரு வருடம் சிறப்பு பயிற்சியில் ஆர்வம் இருந்தால் அனுமதிக்கலாம்.
என் வழிகாட்டல் என்னவெனில்,
TNPSC, TRB மற்றும் TET ( Eligibility & Entrance ) தேர்வுகள் எழுத ஏதுவாக இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் பாடங்கள் பயிலலாம். அது மிகச்சிறப்பானதாக இருக்கும்.
Group வகையறா தேர்வுகளில் 50%’ற்கும் அதிகமான கேள்விகள் நேரடி தமிழ் சார்ந்த கேள்வியாகவே இருக்கும். இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெற இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் பாடங்கள் பயில்வது நமது வெற்றியை எளிதாக்கும்.
மேலும், பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கைக்கு பின்னரும்கூட தான் சார்ந்த பகுதியில் தன் வேலையை தொடரலாம்.
ஒரு துறையில் மிகப்பெரிய உயரம் அடைய வேண்டுமெனில் நாம் தேர்ந்தெடுக்கும் துறையில் நமக்கு பிரதான புரிதலும் அறிவும் மிக மிக அவசியம். அப்படி நமக்கு அத்துறையில் பிரதான அறிவும், புரிதலும் இருக்குமெனில் நம் 90% வேலை மிக மிக எளிதாக முடியும். எனவே, ஈடுபாடு உள்ளது என்பதைவிட நாம் அதில் எவ்வளவு அறிவுடன் உள்ளோம் என்பதே மிகவும் முக்கியம். அதே நேரத்தில் பெண்கள் தான் குடும்பத்துடன் வசிக்கும் இடத்தில் பணி செய்ய ஏதுவான படிப்பினை எடுத்துப்படிப்பது மிக நல்லது. ஏனெனில் என்னால் பொறியியல் படிக்க முடியும் என்கிற ஒரே காரணத்துக்காக பொறியியல் படித்து குடும்ப மற்றும் சமுதாய கண்ணோட்டம் காரணமாக வீட்டில் முடங்கி போகும் நிலையே இன்று அதிகமாக கான்கிறோம். அதை தவிர்க்க ஆசிரியை பணியை தேர்தெடுத்தால் அவர்கள் எங்கு தன் வாழ்வினை அமைக்க நேர்ந்தாலும் அருகாமை தனியார் பள்ளியில்கூட பணியாற்றலாம். அல்லது TET தேர்விற்கான Eligibility மற்றும் Entrance தேர்வு முடித்து அரசு பள்ளிகளில் ஆசிரிய வேலையும் சாத்தியமே..
வாழ்த்துக்கள்.. என முடித்துகொண்டார் ஜனாப்.முஹம்மது கவுஸ் ஆசிரியர்
ஒரு சமுதாயம் உயர வேண்டும் எனில் என்ன செய்யலாம்..?
அச்சமுதாய மக்களுக்கு பொருளாதார உதவி செய்வதைவிட, கல்வி அளிப்போமேயானால், அது நூற்றாண்டுகள் பல கடந்தும் அவர்களுக்கும் , அவரது வாரிசுகளுக்கும் துணையாகும்..
நாகரீகத்தின் அடிப்படை கல்வியாகும். அந்த கல்வி ஒருவருக்கு வசப்படும் எனில் அவர் தான் சார்ந்த குடும்பத்தை மட்டுமல்லாமல் தன் சமூகத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரலாம் – தான் சாராத சமூகத்திற்க்கும் உயரிய பணி ஆற்றலாம்..
கல்வி கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது வார்த்தை அல்ல.. வரலாறு.
உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை தாருங்கள். அவர்கள் தன்னை மட்டுமில்லாமல் இந்த சமுதாயத்தையும் காப்பார்கள்.
கல்வி ஒன்றே காலத்தினும் கரையாத செல்வம்..
கல்வி கற்றோர் காலத்தையும் கற்கிறார்..
கல்வி கடலினும் பெரிதெனில், கற்றோர் அதனை மற்றோர்க்கு கற்பித்தல் காலத்தினும் பெரிது..
உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை தாருங்கள். உங்கள் அருகில் வசிக்கும் ஏழை பிள்ளையின் கல்விக்கும் கரம் கொடுங்கள். அது என்றும் கரையாது நல் சமுதாயம் காக்கும் கேடயமாகும்.
வாழ்த்துக்கள்.
மூரார்பாது – My Screen
Admin & Team







Leave a reply