
அயல்ராவுத்தர் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் – MMS 000215
06-09-2026
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

கட்டுரையில் உதவி : ஜனாப்.மொய்தீன் படே பாய்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அயல்ராவுத்தர் மர்ஹூம் அப்துல் ரஹ்மான்
1929 ஆம் ஆண்டு மர்ஹூம் ஆதம் ஷாஹிப் மற்றும் மர்ஹூமா ஹஜ்ஜி பீ தம்பதிகளுக்கு ஆறாம் பிள்ளையாக பிறந்தவர்தான் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்கள்..
யார் இந்த மர்ஹூம் அப்துல் ரஹ்மான்..?
மேற்படி தம்பதிகளின் ஆறாம் வாரிசு எனில் இவருடன் பிறந்த சகோதரர்கள் – சகோதரி யார்..? என பல விபரங்களை இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையில் பார்க்கலாம்..
ஆமாம், யார் இந்த
மர்ஹூம் அப்துல் ரஹ்மான்..?
மூரார்பாது – My Screen‘ல் தவறாது தன் தகவல் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் ஜனாப்.மொய்தீன் படே பாய் அவர்களின் தகப்பனார்.
நம் பாசத்துக்குரிய ஜனாப்.தாஜூதீன் அப்துல் ரஹிம், சின்னசேலம் (பெங்களூர்) அவர்களின் சிறிய தகப்பனார்..
மேலும், அரசியல் தீப்பொறி மூரார்பாது ஜனாப்.அலாவுதீன் அப்துல் சத்தார் (சவுத் ஆப்ரிக்கா) அவர்களின் பெரிய தகப்பனாருமாவார்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் பெரிய அண்ணார் மர்ஹூம் மொய்தீன் ஷாஹிப் மூரார்பாதுவின் முதல் ஆசிரியர் என அறியப்பட்டவர். இவர் ஜனாப்.முஹம்மது யாசின் (அரசு பேருந்து பணிமனை ஓய்வு) அவர்களின் (அம்மா வழி) நாநா ஆவார். முதல் ஆசான் இவர் என நாம் மூரார்பாதுவின் ஆசிரியர்கள் என்கிற ஆரம்பகால கட்டுரையிலும் பதிவிட்டுள்ளோம்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் இரண்டாவது அண்ணார் மர்ஹூம் அமீர் பாட்ஷா அவர்கள். இரானுவத்தில் வேலை மற்றும் மூரார்பாதுவில் நடுவீதியில் வசித்தவர்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மூன்றாவது அண்ணார் ஜனாப்.அப்துல் ரஹிம் அவர்கள். இவர் நம் பெங்களூரு தாஜூதீன் பாய் அவர்களின் தகப்பனார். சின்னசேலத்தில் குடும்பத்துடன் வசித்தவர். மேலும், இரானுவத்தில் பணி புரிந்தவர்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் நான்காவது அண்ணார் மூரார்பாது மஹல்லாவாசிகளால் 1980-90’களில் மிக நன்றாக அறியப்பட்ட மர்ஹூம் படு படு முஸ்தபா அவர்கள் ஆவார். இவர் தற்போது கள்ளக்குறிச்சியில் வசிக்கும் ஜனாப்.அப்துல் லத்தீப் அவர்களின் தகப்பனாரும்கூட..
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு இடையில் ஒரு மூத்த சகோதரியாக மர்ஹூமா ஜூம்மா பீவி அவர்கள் உண்டு. இவர் ஜனாஸா செய்தியில் மைய்யத் விபரங்களை அயராது தன் பணிகளுக்கு இடையே கவனமுடன் பதிவிடும் ஜனாப்.சுபஹான் முஹம்மதலி அவர்களின் (அம்மா வழி) நாநி ஆவார்.
மர்ஹூம்.ஆதம் ஷாஹிப் மற்றும் மர்ஹூமா ஹஜ்ஜி பீ ஆகியோர்களின் ஆறாம் வாரிசே அயல்ராவுத்தர் என அறியப்படும் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆவார்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் முதல் இளைய சகோதரர் மர்ஹூம் சாலார் அவர்கள். இவருக்கு அல்லாஹ் பிள்ளை பேரினை தரவில்லை. இவரது மறைவிற்கு பிறகு இவரது மனைவியார் மும்பையில் வசித்தார்.

மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் இரண்டாவது இளைய சகோதரர் மர்ஹூம் அப்துல் சத்தார். மூரார்பாது மஹல்லாவாசிகளால் மிக மிக நன்றாக அறியப்பட்ட மர்ஹூம் அப்துல் சத்தார் அவர்கள் இவர் ஜனாப். தாஜூதீன், ஜனாப்.அலாவுதீன், ஜனாப்.நூர்தீன், ஜனாப்.ஷம்சுதீன் மற்றும் ஜனாப்.கம்ருதீன் ஆகியோர்களின் தகப்பனார்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான்

இவரது வம்சாவளி பூர்வீகம் தோப்பூர் என்பதால் தோப்புராங்க என இவரது சகோதரர்கள் அடையாளம் இடப்பட்டாலும் இவர் அயல்ராவத்தர் என்றே அறியப்பட்டு அழைக்கப்படுள்ளார்.
தன் இளமை காலத்தில் முழுக்க முழுக்க மூரார்பாதுவில் தன் சகோதரர்களுடன் வசித்தவர் மூன்று அல்லது நான்காம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டு தன் 19’ஆம் வயதில் லால்பேட்டை மொஹ்தர்மா பாத்திமா பீவி அவர்களை நிக்காஹ் முடித்துள்ளார்.
1951’ஆம் ஆண்டு பஞ்சம் பிழைக்க தன் மனைவி பாத்திமாவுடன் அப்போதைய பம்பாய் சிவிரிக்கு சென்றுள்ளார். சாலையோரம் சாக்கு கோனி கொண்டு கூடாரம் அமைத்து வாழக்கையை கழித்தவருக்கு கோதி என்கிற துறைமுக பணி கிடைத்துள்ளது. கோதி பணியில் இருந்தாலும், தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபாடும், 5 வேளை தொழுகையாளியாகவும் இருந்துள்ளார்.
அயல்ராவுத்தர் அப்துல் ரஹ்மான் மற்றும் பாத்திமா தம்பதிகளுக்கு 5 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 9 பிள்ளைகள்.
மேற்படி பிள்ளைகளில் ஆண் பிள்ளைகள் அப்துல் அஜீஸ் தன் சிறுவயதிலும், ரஹமதுல்லா அவர்கள் சில வருடங்கள் முன்பும்..
பெண் பிள்ளைகளில் சல்மா மற்றும் ஜுஹைரா தன் சிறுவயதிலும், சாபிரா மற்றும் ரம்ஜான் ஆகியோர்கள் சில வருடங்கள் முன்பும் வபாத் ஆகிவிட்டார்கள்.
1980’களில் துவக்கத்தில் மீண்டும் மூரார்பாதுவிற்கு வந்தவர் தனக்கான 3 ஏக்கர் சொந்த நிலத்தில் கிணறு வெட்டி விவசாயம் செய்துள்ளார்.
நிலத்தில் 100 தென்னை மரம் வைத்தும்.. நெல், பருத்தி, கரும்பு, மனிலா மற்றும் குச்சி வள்ளி கிழங்கு விவசாயம் செய்துள்ளார்.
மேலும், அழைப்பின் பேரில் விவசாய நிலங்களுக்கு போர் போடும் வேலையும் செய்துள்ளார். இடையே கிணற்றில் சரிவர தண்ணீர் கிடைக்காததால் கிணற்றை ஆழம் படுத்த முயல்கையில் கடும் பாறை கிடைத்திட விவசாயத்திற்கு சரிவர தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பொய்த்திட காட்டில் கோழி, முயல், ஆடு மற்றும் புறா வளர்த்து பொருளாதாரம் ஈட்டினார்.
மூரார்பாதுவில் விவசாயம் இனி சரி வராது என முடிவெடுத்தவர் தன் 63’ஆம் வயதில் 1992’ஆம் ஆண்டு விவசாய நிலம் 3 ஏக்கரை விற்று விட்டு பம்பாய்க்கு இடம் பெயர்கிறார்.
இனி நேரடியாக சில கேள்விகளை படே பாய் ஜனாப்.மொய்தீன் அவர்களிடம் முன் வைத்தோம்..
“சொல்லுங்க பாய்.. நீங்கள் மொத்தம் எத்துனை பிள்ளைகள்..?”
நாங்கள் மொத்தம் 9 பிள்ளைகள்
ஆண் பிள்ளைகள் 5 பேராக அண்ணார்கள் அப்துல் அஜீஸ், முஹம்மது ஹனீபா, ரஹமதுல்லா, நான் மொய்தீன் மற்றும் என் தம்பி அப்துல் கனி’யும்..
பெண் பிள்ளைகள் சல்மா, ஜுஹைரா, சாபிரா மற்றும் ரம்ஜான் என 4 வாரிசுகள். எனக்கு அண்ணன் மூன்று பேரும் ஒரு தம்பியும் என்றாலும் மீதம் பெண் பிள்ளைகள் அத்துனை பேரும் எனக்கு அக்காக்களே என்றார்.
“பெரிய குடும்பம்தான் பாய்.. ஊரில் ஏதேனும் செய்து இருக்கலாமே.. ஏன் மீண்டும் பம்பாய் இடம் பெயர்வு.. அங்கு சென்று என்ன செய்தார்..?” என்கிற கேள்விக்கு..
அதான் ரஷித், மூரார்பாதுவில் விவசாயம் இனி சரி வராது என முடிவெடுத்தவர் தன் 63 ஆம் வயதில் 1992’ஆம் ஆண்டு விவசாய நிலம் 3 ஏக்கரை விற்று விட்டு பம்பாய்க்கு இடம் பெயர்கிறார்.
விவசாய நிலங்களை விற்று வந்த பணத்தில் பம்பாயில் இரண்டு வீடுகள் வாங்கினார். நான், அண்ணன் தம்பி என நாங்கள் வேலைக்கு சென்றாலும் உழைத்தே பழக்கப்பட்டவர் என்பதால் தன் முதுமை காலத்திலும் எங்கள் பேச்சை பொருட்படுத்தமல் ஊர் நாட்டில் கிடைக்கும் பாய், குடம், முறம் மற்றும் விளக்குமாறு போன்ற பொருட்களை வரவைத்து வீதியில் இறங்கி வியாபாரம் செய்வார்.
4 ஆம் வகுப்பு அளவுக்கு மட்டுமே ஊர் நாட்டில் படித்திருந்தாலும் கோதியில் வேலை பார்த்த காலத்தில் ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழுடன் ஆங்கிலமும் பேசுவார். ஆங்கிலம் படிக்க, எழுத தெரிந்த அளவுக்குகூட அவருக்கு தமிழ் வராது.
வயோதிகம் காரணமாக சற்று ஓய்ந்தவர் தன் முதுமை காலமான 75ஆம் வயதில் 2004 ஆம் ஆண்டு மும்பையில் வபாத் ஆனார்.
எனது தாயார் பாத்திமா அவர்கள் 2016’ஆம் ஆண்டு வபாத் ஆனார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுவூன்
அல்லாஹ், இருவரின் நன்மைகளை பொருந்திக்கொண்டு, அவர்களின் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக..
ஆமீன்..
மூரார்பாது – My Screen
Admin & Team








Leave a reply