
அம்மை பத்ரகாளி # MMS – 000205
05-04-2026
MMS – 000205
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்..)
“அம்மை பத்ரகாளி”
மூரார்பாது கிராமம் – 1980‘களின் துவக்கத்தில்..
ஒரு நாள் மதியம் வேளை இருக்கும்..
வீட்டினுள் தாத்தி உறித்து உறித்து தரும் மல்லாக்கொட்டையின் பருப்பினை சுவைத்து கொண்டிருந்த நேரம்..
எனக்கு ஒரு 5 முதல் – 7 வயதுக்குள் இருக்கலாம்.
வீட்டிற்கு வெளியே ஏதோ ஒரு பெரும் சத்தம்.. ஊருக்குள் மேளம் அடித்து பொதுவான செய்தியை நியாயமாரே என்றோ அல்லது இதனால ஊரு சனம் எல்லோருக்கும் தெரியபடுத்துவது என்னன்னா..? என்றோ தெரியப்படுத்துவார்கள்.
அன்று அப்படியான ஒரு மேள சத்தம் போல் இல்லாமல் வேறு ஏதோ ஒரு கலவையான பெரும் சத்தமாக இருந்தது.
என்னவாக இருக்கும் என நான் யோசித்துகொண்டே இருக்கையில் அந்த சத்தம் கூடிக்கொண்டே வந்தது.
“தாத்தி.. என்னா சத்தம் அது” என்றேன்..
“ஊருல திருவிழா நடக்குதுல்ல அதான்.. இன்னிக்கு மூனாவது நாளா..? காளி வருவான்னு நினைக்கிறேன்..” என்றார் என் தாத்தி..
“காளியா..? அப்படின்னா யாரு தாத்தி..” என்றேன்..
“ம்ம்ம்.. நமக்கு அல்லா மாதிரி அவங்களுக்கு காளியல்லா..” என்றவரிடம்..
“அப்படியா.. காளியல்லான்னுல்லாம் இருக்காங்களா..? அவங்க எங்க இருப்பாங்க..? எப்படி இருப்பாங்க..? என்ன பன்னுவாங்கன்னு..? கேட்டேன்..
அந்த நேரம் அந்த சத்தம் இன்னும் கூடிக்கொண்டே வந்தது..
“ம்ம்ம். உனக்கு சொன்னா புரியாது.. சொல்லுக்குள்ள அடங்காது, வா காட்டுறேன்..” என என்னை தெருவுக்கு அழைத்து போனார் என் தாத்தி..
தெருவில் யாருமில்லை.. ஆனால்,
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
என பெரும் சத்தம் மற்றும் பெருங்குரலில் ஒரு கர்ஜனை சத்தமும் சாலை பக்கமிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது.
கொஞ்ச நேரம் காத்திருந்த தாத்தி “சரி, காளியல்லா வரும்போது காட்டுறேன்.. வா..” என என்னை வீட்டுக்குள் அழைத்து வந்தவர் கதவை சாத்தினார்.
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்.. என்கிற அந்த கர்ஜனையின் ஒலி கூடிக்கொண்டே
கொஞ்ச நேரம் கழித்து மிக மிக அதிகமாகிக்கொண்டே வர நான் தாத்தியை தேடினேன். வீட்டின் கூடாரத்தில் இருந்தவரை கானோம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
“தாத்தி…” என பெரும் குரலில் தோட்டம் பக்கம் குரல் கொடுத்தேன்..
“என்னாபா..” என ஏதோ வேலையிலிருந்தவரிடம்
“தாத்தி…காளியல்லா வந்துட்டாங்கன்னு” நான் சொன்னது இந்த
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்.. என்கிற பெரும் சத்தத்தில் தாத்திக்கு கேட்கவில்லை.
சரி, நாமே போய் பார்ப்போம் என கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தேன்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்.. என்கிற அந்த சத்தம் மிக சரியாக வீட்டின் கதவுக்கு வெளியேதான் ஒலித்தது. நான் வெளியே அந்த ஒரு பொழுதில்..
திடுமென என் எதிரே மிக ஆக்ரோஷமாக பாய்ந்து ஓடி வந்தது அந்த உருவம்.
முகம் முழுக்க கருப்பாக..
தலை முடியை காற்றில் அலையவிட்டு..
காலில் கட்டிய சலங்கை ஜல் ஜல் என ஒலியெழுப்ப அங்குமிங்கும் குதித்தாடி..
கண்களில் சிவப்பு நிறமேற்றி..
உயர்த்திய கையில் ஒரு பெரும் வெட்டறுவா ஏந்தி..
தோள்களை உயர்த்தி..
நாக்கினை நீளமாக தொங்க விட்டு..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்.. என்கிற சத்தத்தோடு என்னை மிக மிக அருகில் மிக மிக உக்கிரமாக பார்த்து “டேஏஏஏய்ய்ய்” என நீளமான தன் சிகப்பு நாக்கை தொங்க விட்டு கையிலிருந்த வெட்டறுவா தூக்கி ஆக்ரோஷ ஆட்டம் காட்டினாள் காளியல்லா..
அந்த ஒரு கணம்.. முழுக்க முழுக்க பயந்து போய் நிலை குலைந்து “தாத்திஈஈஈ..” என கத்திக்கொண்டே
எடுத்தேன் பாரு ஓட்டம் வீட்டுக்குள்..
அதே நேரம் தோட்டத்திலிருந்து வாசல் வந்த தாத்தியிடம் போய் புகலிடமடைந்தேன்..
“தாத்தி.. தாத்தி.. அங்க, அங்க..” என பயத்தில் அரற்றிய என் உடலில் லேசான நடுக்கம் வந்திருந்தது.
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டேஏஏஏய்.. என
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்.. டேஏஏஏய்..
என்கிற கர்ஞனையுடன் ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலியுடன் காளியம்மா.. ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள்
தாத்தியின் கையை இறுகப்பற்றிக்கொண்டவன் அவருக்கு பின்னால் பதுங்கிகொண்டேன்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
“டேஏஏஏய்..” என உயர்த்தி வரும் குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.
என்னை மெல்ல முன்னுக்கு இழுத்த தாத்தி.. “ம்ம்ம்.. பயப்பட கூடாதுபா.. இது நல்லங்களை எதுவும் பன்னாது. கெட்டவங்களைதான், தீய சக்திகளைதான் அழிக்கும்..” என என்னை தேற்றி முன்னுக்கு இழுத்தார்..
“அப்படியா..” என ஏறக்குறைய முட்டி வரும் அழுகையுடன் கேட்டேன்..
ஆமாபா.. சரி நான் வேனா உன்னை பார்த்து ஸ்ரீ காளியம்மாவை சிரிக்க சொல்லட்டா எனக் கேட்டார்.
மெல்ல மெல்ல தாத்திக்கு பின்னாலிருந்து தலையை நகர்த்தி ஸ்ரீகாளியம்மாவை பார்த்தேன்..
முகம் முழுக்க கருப்பாக..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
தலை முடியை காற்றில் அலையவிட்டு..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டேய்ஏஏஏய்..
காலில் கட்டிய சலங்கை ஜல் ஜல் என ஒலியெழுப்ப அங்குமிங்கும் குதித்தாடிட..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டேய்ஏஏஏய்..
கண்களில் சிவப்பு நிறம் காட்டி..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டேய்ஏஏஏய்..
உயர்த்திய கையில் ஒரு பெரும் வெட்டறுவா எந்தி..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டேய்ஏஏஏய்..
தோள்களை உயர்த்தி..
நாக்கினை நீஈஈஈளமாக தொங்கவிட்டு..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டேய்ஏஏஏய்.. என ஆக்ரோஷ ஆட்டம் காட்டினாள்..
“ம்ம்ம்ஹூம்.. இதுதான் தீய சக்தி..” என மீண்டும் தாத்திக்கு பின்னால் பதுங்கினேன்..
தாத்தி இப்போது ஸ்ரீகாளியம்மாவை அதட்டுவது கேட்டது.
“ஏய்.. பிள்ள பயப்படுறான் பாரு.. சும்மா இரு..” என அதன் ஆக்ரோஷத்தினை அமர்த்தினார்..
சத்தம் அடங்கிட நான் மெல்ல தலையை தாத்திக்கு பின்னாலிருந்து முன் கொண்டு வந்தேன்..
முகம் முழுக்க கருப்பாக..
தலை முடியை அழகாக காற்றில் அலையவிட்டு..
காலில் கட்டிய சலங்கையில் ஜல் ஜல் என இதமான ஒலியெழுப்பி..
கண்களின் சிவப்பு நிறத்தில் ஒரு சாந்தம் காட்டி..
தாழ்த்திய கையில் அந்த வெட்டறுவாவை கீழிறக்கி..
தோள்களை சுறுக்கி..
நாக்கினை விலக்கி..
நான் தாத்தியை பார்த்தேன்..
“ம்ம்ம் போ..” என்றார்கள்.
“ம்ஹூம்.. நான் போக மாட்டேன்..” என்றேன்..
“அட…போபா.. அது உன்னை ஒண்ணும் பன்னாது..” என என்னை முன்னே தள்ளினார்.
இப்போது “அய்யா.. வா பயப்படாத..” என புன்னைகையுடன் என்னை அழைத்தாள் அந்த ஸ்ரீ காளியம்மா..
மெல்ல மெல்ல ஸ்ரீ காளியம்மா பக்கம் போனேன்..
“அய்யா.. சாமி..” என புன்னைகையுடன் என்னை அருகில் அழைத்துகொண்ட ,ஸ்ரீ காளியம்மா திடிரென
டம டம டம டம்..
டம டம டம டம்..
டம டம டம டம்..
டேய்ஏஏஏய்.. என ஆக்ரோஷ ஆட்டம் காட்டினாள்..
மீண்டும் வீட்டுக்குள் எடுத்தேன் பாரு ஓட்டம்..
உங்களில் நிறைய பேருக்கு இப்படியான நிகழ்வுகள் நினைவில் இருக்கலாம்.
யார் இந்த ஸ்ரீ காளியம்மா..?
பத்திரகாளி அம்மன், தட்சனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனின் சடாமுடியிலிருந்து வீரபத்திரருடன் தோன்றிய ஆதிசக்தியின் உக்கிர வடிவம் என்கிறார்கள். மங்களகரமானவள் என்று பொருள்படும் இவர், தீமைகளை அழித்து, கொடிய நோய்களை நீக்கி, பக்தர்களைக் காக்கும் தெய்வமாக வழிபடப்படுகிறார்.
பத்திரகாளி, பதினாறு கைகளுடன், கையில் ஆயுதங்களைத் தாங்கி, செந்தூரக் கோலத்தில் அருள்பாலிப்பார் என்கிறார்கள்.
ஒரு காலத்தில் பஞ்சம் காரணமாக வந்தவர்களின் கூடைக்குள்ளிருந்த குழவிக்கல் அம்மனாக மாறிய தல வரலாறு, அத்தனூர் பத்ரகாளி அம்மன் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காளி, திருமாலின் ஏழு பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல் வளர்த்ததால் “அம்மை பத்ரகாளி” என்று அழைக்கப்பட்டார்.
காளிக்கு நேர்ந்து, பொங்கல் வைத்தும், பலி கொடுத்தும் பக்தர்கள் வழக்குகளில் வெற்றி பெறுவதாகவும், நோய்கள் குணமாவதாகவும் நம்பப்படுகிறது,
பத்ரகாளி அம்மன், நல்லதைப் பாதுகாக்கும் மகாகளியாக வழிபடப்படுகிறார்.
நாடார் சமூகத்தின் குலதெய்வமாக, காக்கும் தெய்வமாகப் போற்றப்படுபவர் பத்திரகாளி அம்மன். நாடார்கள் பத்திரகாளியின் மைந்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குறிப்பாக தென்தமிழகத்தில் இவருக்குப் பல கோயில்கள் உள்ளன.
பத்ரகாளி அம்மன், கொற்றவை, நிசும்பசுதனி, வடபத்ரகாளி, பேச்சி, நாச்சி, பிடாரி எனப் பல வடிவங்களில் வழிபடப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆனைக்கரை, திருச்செந்தூர், கடம்போடுவாழ்வு, மற்றும் பல பகுதிகளில் நாடார் உறவின்முறையைச் சார்ந்த பத்திரகாளி அம்மன் கோயில்கள் பிரசித்தி பெற்றவை.
அம்மனுக்கு வில்லிசை, முளைப்பாரி, சக்தி கரகம், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற வழிபாடுகள் திருவிழா காலங்களில் சிறப்பாக நடைபெறும்.
பத்ரகாளி அம்மன் கொடிய நோய்களை அகற்றுபவராகவும், பனை மரங்களை அதிகமாகக் கொண்ட பகுதிகளில் வனதெய்வமாகவும், தீமைகளை அழித்து தங்களைக் காக்கும் சக்திமிக்க தெய்வமாகவும் நம்பப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயில் 1907-ல் புனரமைக்கப்பட்டு, நாடார் சமூகத்தினரால் பிரம்மாண்டமாக வழிபடப்பட்டு வருகிறது.
பத்திரகாளி அம்மனை மூவேந்தர்களின் குலதெய்வமாகவும், பாண்டிய குல சத்ரியர் வழிபாட்டுத் தெய்வமாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில்
பார்வதியின் பரம தெய்வீக அம்சமாக விளங்கும் ஸ்ரீ பத்திரகாளியம்மன், கருணையும், சக்தியும், தீமையை அழிக்கும் கொடிய வலிமையும் கொண்டவர் என நம்பப்படுகிறது.
உங்களுடைய அனுபவம் என்ன..எப்படி என நீங்கள் இங்கே பகிர்ந்துக் கொள்ளலாம்..
மூரார்பாது – My Screen
Admin & Team








Leave a reply